மாலத்தீவு ஜனாதிபதி சீனா பயணம்
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அழைப்பை தொடர்ந்து மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு ஜனவரி 8 முதல் 12 வரை சீனாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. மாலத்தீவு இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள கடல்சார் அண்டை நாடான மாலத்தீவு இந்தியா மற்றும் சீனாவிற்கு முக்கிய ராஜீய உறவு கொண்ட நாடாக உள்ளது.
உலக வானிலை அமைப்பிற்கு முதல் பெண் செயலாளர்
உலக வானிலை அமைப்பிற்கு முதன் முதலாக ஒரு பெண் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அர்ஜெண்டினாவைச் சேர்ந்த செலெஸ்டே சவுலோ 2024ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் உலக வானிலை அமைப்பின் பொதுச் செயலா ளராகப் பதவியேற்றுள்ளார். இவ்வமைப்பின் முதல் பெண் பொதுச்செயலாளராகவும், தென் அமெரிக்கா நாடுகளிலிருந்து முதல்செயலாள ராகவும் உள்ளார் என அவ்வமைப்பு வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் நாணயம் ஈரான் ஆர்வம்
வளர்ந்து வரும் பொருளாதார நாடு களின் பிரிக்ஸ் கூட்டமைப்பிற்கு பொது நாணயம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் உறுப்பு நாடுகளுடன் இணைந்து அதை உருவாக்குவதில் ஈரான் ஆர்வமாக இருக்கிறது என்றும் அந்நாட்டின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் மஹ்தி சஃபாரி தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச வணிகப் பரிமாற்றங்களில் டாலரின் பயன் பாட்டை நீக்குவதற்கு நாங்கள் ஆர்வமாக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவிற்கு துருக்கி ஆதரவு
காசா மீதான போரில் பாலஸ் தீனர்களை இஸ்ரேல் ராணுவம் இனப்படுகொலை செய்வதை வலியுறுத்தி, சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கில் தென் ஆப்பிரிக்காவிற்கு துருக்கி ஆதரவு தருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள் ளது. சர்வதேச அளவில் இஸ்ரேலை போர்க் குற்றவாளி என அம்பலப்படுத்துவோம் என துருக்கி ஜனாதிபதி நவம்பர் மாதம் அறி வித்திருந்தார்.
கனடா: முஸ்லிம் குடும்பத்தை கொன்றவருக்கு ஆயுள்
மத வெறுப்பின் காரணமாக கனடா நாட்டில் முஸ்லிம்கள் நான்கு பேரை குடும்பத்துடன் லாரி ஏற்றி கொலை செய்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.இரண்டு வருடங்களுக்கு முன்பு கனடா முழுவதும் அதிர்வலை ஏற்படுத்திய இந்த வழக்கிற்கு இந்த ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனையின் காரணமாக 25 ஆண்டுகளுக்கு பிறகே ஜாமீன் பெறமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.