world

img

சோசலிசத்தின் புதிய வெற்றியை நோக்கி முன்னேறுவோம்!

பெய்ஜிங், செப். 30- சீனத் தன்மைகளுடனான சோசலிசத்தின் புதிய வெற்றியை நோக்கி நாம் முன்னேற வேண்டும் என்று சீன ஜனாதிபதியும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாள ருமான ஜீ ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். கடந்த பத்தாண்டுகளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், மக்கள் சீனக் குடியரசும் சாதித்த  அளப்பரிய சாதனைகளைப் படம் பிடித்துக் காட்டும் கண்காட்சியைத் திறந்து வைத்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “புதிய சகாப்தத்தில் முன்னேறு கிறோம்” என்ற தலைப்பில் நடைபெறும் இந்தக்  கண்காட்சியில் பொருளாதாரம், சமூகம், அறி வியல், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நடத்தப்பட்ட சாதனை கள் மக்களின் பார்வைக்காக படங்கள் மற்றும் காணொளிகள் மூலமாகக் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. கண்காட்சியைப் பார்வையிட்ட பின்னர் உரையாற்றிய ஜீ ஜின்பிங், “நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த சவால்கள் நிறைந்த  பல பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஒட்டுமொத்தக் கட்சி, ஒட்டுமொத்த நாடு மற்றும் மக்கள் அனை வரும் ஒன்றுபட்டு நிற்கிறோம். நாட்டின் வருங்கா லத்திற்காகப் பல்வேறு சாதனைகளைச் செய்திருக்கிறோம். அரசியல், பொருளாதார, கோட்பாட்டு ரீதியான மற்றும் இயற்கையான நெருக்கடிகள், சவால்கள் மற்றும் பிரச்சனை கள் ஆகிய அனைத்திலும் சாதனைகள் படைத்துள்ளோம்” என்றார்.

மேலும் பேசிய அவர், “கம்யூனிஸ்ட் கட்சி யால் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. தரம் உயர்ந்த நிறு வனங்கள், உறுதியான அடித்தளங்கள் மற்றும்  நாட்டைப் புதுப்பிக்கத் தேவையான முன்வந்து நிற்கும் மனநிலை ஆகியவற்றை கட்சி உருவாக்கியுள்ளது. இத்தகைய செயல்பாடு களில் மக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. கடந்த பத்தா ண்டுகளில் கிடைத்த பலன்களை உறுதிப் படுத்தும் நடவடிக்கைகள் தேவையாகும். அதோடு, புதிய சீனம், சீர்திருத்தங்கள், சோச லிசத்தை மேம்படுத்துதல், சீன நாட்டை மேம் படுத்துதல் ஆகியவற்றில் கட்சி மேற்கொண்ட நடவடிக்கைகளின் வரலாற்றை நல்ல முறை யில் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய  புரிதல் நம்பிக்கையை அளித்து, வரலாற்று  ரீதியான முன்முயற்சிகளை செழுமைப் படுத்தும்” என்றார்.

30 ஆயிரம் சதுர மீட்டரில் கண்காட்சி

கடந்த பத்தாண்டுகளில் கிடைத்த வளர்ச்சி யை மக்களுக்குக் காட்சிப்படுத்தும் வகையில் 30 ஆயிரம் சதுர மீட்டரில் கண்காட்சி நடை பெற்று வருகிறது. இதில் 6 ஆயிரம் படங்கள், மாதிரிகள் மற்றும் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. அறிவியல், தொழில்நுட் பம், உற்பத்தி ஆகிய துறைகளில் உருவாக்கப் பட்டுள்ள பொருட்கள் மற்றும் மாதிரிகள் இடம் பெற்றிருக்கின்றன. கடுமையான வறுமையை ஒழிக்கவும், கொரோனா வெற்றிகரமாக வெல்ல வும் மேற்கொண்ட முயற்சிகள் விளக்கப் பட்டுள்ளன.

பொய்ப்பிரச்சாரம் தோல்வி

பல்வேறு நிகழ்வுகளில் ஜீ ஜின்பிங் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். கட்சியின் மாநாட்டுத் தயாரிப்புப் பணிகளில் நேரடி யாகப் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கி  வருவதால், சில நாட்கள் அவர் அரசு நிகழ்ச்சி களில் பங்கேற்கவில்லை. மாநாட்டுக்குத் தேர்வு  செய்யப்பட்ட 2 ஆயிரத்து 296 பிரதிநிதிகளுக் கான தகுதிகளை நிர்ணயிப்பதில் தொடங்கி, அவர்களைத் தேர்வு செய்யும் தேர்தலுக்கான வழிமுறைகள் வரையிலும் அவரது நேரடி பங்களிப்பு இருந்து வந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் ஜீ ஜின்பிங்  வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுவிட்டதாக மேற்கத்திய ஊடகங்களில் செய்திகள் வெளியி டப்பட்டன. அவை வெறும் பொய்ப்பிரச்சாரம் என்பதை ஜீ ஜின்பிங்கின் கட்சி மாநாட்டுப் பங்களிப்புகள் மற்றும் தற்போதைய அரசு நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

 

;