world

img

நிவாரணப் பொருட்களுடன் துருக்கி சென்ற இந்திய விமானம்

அதானா, பிப்.12- நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி க்கு இந்தியாவில் இருந்து மருந்து மற்றும் நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்ட 7-வது விமானம் துருக்கி சென்றடைந்தது. மருந்து மாத்திரைகளுடன், இசிஜி கருவிகள், சிரெஞ்ச் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பொருட்களுடன் காசியாபாத் விமானப் படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் துருக்கியின் அதானா நகருக்கு சென்றடைந்தது.