world

img

இஸ்ரேலின் நாசகரக் கொள்கை

டெல் அவிவ், ஜூன் 23- மேற்கு ஆசிய நாடுகள் மீது அமெரிக்க ஆதரவுடன் கொடூரமான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேலின் படை வீரர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரிப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. சில நாட்களுக்கு முன்பாக, இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் அந்நாட்டு ராணுவச் சிறையில் உயிரிழந்தார். இதுவரையில் அவரது மரணம் எப்படி நேர்ந்தது என்பது தெரிய வில்லை. அது குறித்த ஆய்வு நடந்ததாக வும் தகவல்கள் இல்லை. இந்த சம்பவம் பற்றிப் பேசுவதற்கு ராணுவ வட்டாரங்கள் தயாராகவும் இல்லை. இது போன்று பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. போரில் ஈடுபடாத சமயங்களில் ஏற்படும் ராணுவ வீரர்களின் உயிரிழப்புகளில் தற்கொலைதான் அதிகமான காரணமாக அமைந்துள்ளது என்று பாலஸ்தீன் டுடே என்ற செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

 இந்த எண்ணிக்கையும் அண்மைக் காலத்தில் அதிகரித்திருக்கிறது. மற்றொரு உளவுத்துறையின் அதிகாரி பற்றிச் செய்தி வெளியிட்ட ஹீப்ரு மொழிப்பத்திரிகையான இஸ்ரேல் ஹயோம், உயரமான கட்டிடம் ஒன்றிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார் என்று செய்தி வெளியிட்டது.  அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, 2020-ஆம் ஆண்டில் 9 பேரும், 2021-ஆம் ஆண்டில் 11 பேரும் தற்கொலை செய்து கொண்டனர் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை பெரும் அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதை உறுதி செய்யும் வகையில், இதுவரையில் 11 இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். ராணுவப் பணிகள் வீரர்களின் மீது பெரும் அழுத்தம் தருவதே பெரிய காரணமாகச் சொல்லப் படுகிறது.  பணி சுமையின் அழுத்தத்தால் இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டிருக்கிறார். பாலஸ்தீன எல்லையில் உள்ள ராணுவ முகாம் ஒன்றில் அவர் பணியாற்றினார். கணினி வல்லு நராகவும் அவர் இருந்தார் என்று அவருடன் பணியாற்றியவர்கள் கூறுகிறார்கள். பெரும் பணிச்சுமையுடன் அவர் இருந்திருக்கிறார் என்பது தெரிய வந்தாலும், அதிகாரப்பூர்வ தகவல்களில் அது இடம் பெறவில்லை. தற்கொலைகள் அதிகரிப்பதை அங்கீ கரிக்கும் வகையில் பல்வேறு ஆலோசனை முகாம்களுக்கு இஸ்ரேலிய ராணுவம் ஏற்பாடு செய்து வருகிறது. 

;