world

img

ஆப்கன் பெண்களுக்கு கடும் கொடுமைகள்

காபூல், மே 29- ஆப்கானிஸ்தானில் பெண்கள் வலுக் கட்டாயமாகக் கடத்தப்பட்டு காணா மலேயே போய் விடுகிறார்கள் என்று இரண்டு பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆப்கானிஸ்தானில் பெண் களுக்குப் பெரும் கொடுமைகள் இழைக்கப்படுகின்றன என்று ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் மற்றும் சர்வதேச நடுவர்கள் ஆணையம் ஆகியவை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  பெண்கள் உரிமை கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்று கூறியுள்ள அந்த அறிக்கையில், “சிறையில் அடைத்தல், சட்டத்துக்கு விரோதமாகக் கடத்துதல், சித்ரவதை செய்தல் மற்றும் தவறாக நடத்துதல் ஆகிய கொடுமைகள் பெண்களுக்கு நேர்கின்றன” என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இருபது ஆண்டுகள் பயங்கர வாதத்திற்கு எதிரான போரை நடத்து கிறோம் என்ற பெயரில் அமெரிக்க மற்றும் அதன் தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானை சீர்குலைத்தன. சமாளிக்க முடியாமல் அந்தப் படைகள்  அங்கிருந்து வெளியேற முடிவெடுத்த போது, தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். மதக் கோட்பாடு களை நடைமுறைப்படுத்துகிறோம் என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான நட வடிக்கைகள் அங்கு நடந்து வருகின்றன. பொது இடங்களுக்கு பெண்கள் வருவதை ஆட்சியாளர்கள் அனு மதிப்பதில்லை. பெரும்பாலான பணிகளில் அவர்களை அமர்த்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பிற்கு மேல் அவர்கள் கல்வி கற்க வேண்டாம் என்று ஆணை பிறப்பித்துள்ளார்கள். இந்த ஆட்சியாளர்களை சர்வதேச அமைப்புகளோ அல்லது சர்வதேச  சமூகமோ இதுவரையில் அங்கீகரிக்க வில்லை என்றாலும், இத்தகைய மனித  குல விரோத செயல்களைப் பார்த்துக் கொண்டு எதுவும் செய்யாமல் இருக்க முடி யாது என்று அந்த இரண்டு அமைப்பு களும் கூறியுள்ளன.

;