world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஜெர்மனி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் 

வெர்டி தொழிற்சங்கம் தலைமையில் ஜெர்மனியின் 130 போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 90,000 பொதுப் போக்குவரத்து தொழிலாளர்கள், ஆரோக்கியமான பணி நிலைமைகள், முறையான ஊதியம் ஆகியவற்றை  வலியுறுத்தி 24 மணிநேர வேலை நிறுத்தத்தை நடத்தியுள்ளனர்.2024 துவங்கியது முதல் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் முழுவதும் தொழிலாளர்கள் - விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இஸ்ரேலுக்கு ஆதரவு தரக்கூடாது; அரசு ஊழியர்கள் போராட்டம் 

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசு  ஊழியர்கள்  பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் நாடுகள் இஸ்ரேலுக்கு  வழங்கும் ராணுவ உதவியை  நிறுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தினர் . எங்கள் அரசாங்கங்களின் தற்போதைய கொள்கை முடிவுகள் தார்மீக நிலைப்பாட்டை பலவீனப்படுத்துகிறது; உலகளவிலான சுதந்திரம், நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான  ஆதரவை கேள்விக்குறியாக்குகிறது என  தங்கள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்கா அட்டூழியம் ;  பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டம் 

சிரியா, இராக்,ஏமனில் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் நிலையில் திங்கள் கிழமை ஐநா பாதுகாப்பு அவை அவசரக் கூட்டத்தை நடத்த உள்ளது. சனிக்கிழமை அன்று  சிரியா மற்றும் இராக்கில் அமெரிக்கா எல்லைகளில் குண்டுவீசியதில் மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றச் சூழலில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. சிரியா, இராக்,ஏமனில் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் நிலையில் திங்கள் கிழமை ஐநா பாதுகாப்பு அவை அவசரக் கூட்டத்தை நடத்த உள்ளது. சனிக்கிழமை அன்று  சிரியா மற்றும் இராக்கில் அமெரிக்கா எல்லைகளில் குண்டுவீசியதில் மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றச் சூழலில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.