world

img

தடுப்பூசி போடாவிட்டால் பணிநீக்கம் பிஜி அரசு அதிரடி அறிவிப்பு

 

பிஜியில் தடுப்பூசி போடாவிட்டால் வேலையில்லை என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி செலுத்துவதிலும், தயாரிப்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. சில நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் மக்களைத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பிஜியில் ‘தடுப்பூசி போடாவிட்டால், வேலை இல்லை என அந்த நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என்று பிரதமர் பிராங்க் பைனிமராமா அறிவித்துள்ளார்.

மேலும், ஆகஸ்டு 15 ஆம் தேதிக்குள் தடுப்பூசியின் முதல் டோசை செலுத்திக்கொள்ளாத அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். நவம்பர் 1 ஆம் தேதிக்குள் இரண்டாவது டோஸ் செலுத்தப்படாவிட்டால், பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் பிஜியின் பிரதமர் பிராங்க் பைனிமராமா தெரிவித்துள்ளார்.

;