திருவனந்தபுரம்:
கேரளத்தில் முதல் முறையாக ‘ட்ரைவ் த்ரூ வாக்சினேசன் சென்டர்’ என்கிற திட்டம் திருவனந்தபுரம் மகளிர் கல்லூரியில்வியாழனன்று (ஆக.19) தொடங்கப்பட்டது. இதன் மூலம்தடுப்பூசி போட மையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்க தேவையில்லை; வாகனத்தில் அமர்ந்தபடி ஊசி போட்டுக் கொள்ளலாம்.24 மணி நேரமும் செயல்படும் இந்த மையத்தில் உள்ள அதிகாரிகள் வாகனத்தை அணுகி தடுப்பூசி போடுவார்கள். இதற்காக மாலை 3 மணி முதல் கோவின் போர்ட்டலில் பதிவு செய்யலாம். விடுமுறை நாட்களில் முடிந்தவரை அதிகமானோருக்கு தடுப்பூசி போடுவதே இதன் நோக்கம். இம்மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது என்று மாவட்ட மருத்துவ அதிகாரி கே.எஸ்.ஷினு கூறினார்.இதற்கிடையில், விடுமுறை நாட்களில் உட்பட கேரளத்தில் தடுப்பூசி போட வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார்.