world

img

பிரிட்டனில் சரிவு

லண்டன், மே 12- பிரிட்டனில் சில்லரை வர்த்தகத்தில் சரிவு காணப்படுவது அந்நாட்டின் பொருளாதார நிபுணர்களை வியக்க வைத்துள்ளது.  ஏப்ரல் 2021ல் ஏற்பட்ட அதிகரிப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியாவிட்டாலும், சரிவு இருக்காது என்று எதிர்பார்த்தனர். ஆனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில், நடப்பாண்டில் 0.3 விழுக்காடு எதிர்மறை வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. பணவீக்கத்தின் அளவு நுகர்வோர் மனநிலையைப் பாதித்துவிட்டது. சாமானிய மக்களின் வாங்கும் சக்தி சுருங்கி விட்டது என்கிறார் வர்த்தகத்துறைக்குழுவின் நிர்வாகிகளில் ஒருவரான ஹெலன் டிக்கின்சன். உக்ரைன் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தாக்குதல்கள் நிறைவு  பெறும் வரையில் நீடிக்கும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.