world

img

தீக்கதிர் உலக செய்திகள்

நவதாராளமய மசோதாவிற்கு எதிராக  கென்ய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் 

நவதாராளமய பொருளாதார மசோதாவை எதிர்த்து கென்யாவில் கம்யூனிஸ்ட் கட்சி  ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி தெருக்களில் போராடி வருகிறது. இந்த போராட்டத்தை கலைக்க அந்நாட்டு காவல் துறை அடக்கு முறையை ஏவியுள்ளது. இந்நிலையில் “எங்களை வழிநடத்த ஒரு அமெ ரிக்க பொம்மையை ஜனாதிபதியாக ஏற்க மாட்டோம்! எங்கள் உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் தெருக்களில் நிற்கிறோம்!” என கென்ய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைய  மலேசியா, தாய்லாந்து விண்ணப்பம் 

‘பிரிக்ஸ் பிளஸ்’ பொருளாதார கூட்ட மைப்பில் இணைய மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் விருப்பம் தெரிவித் துள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்பு பிரிக்ஸ் பிளஸ் கூட்டமைப்பில் இணைவதற்கு முறைப் படி விண்ணப்பித்துள்ளதாக மலேசியா அரசு அறிவித்திருந்தது. தற்போது, ​​தாய்லாந்து பிரிக்ஸ் அமைப்பில் சேர அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளது.இந்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு ரஷ்யா தலைமை யில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.

பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரித்தது அர்மீனியா 

ஸ்லோவேனியா, ஸ்பெயின், நார்வே மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளைத் தொடர்ந்து அர்மீனிய குடியர சும் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்துள் ளது. “சர்வதேச சட்டம் , நாடுகளிடையேயான சமத் துவம், இறையாண்மை மற்றும் அமைதியான சகவாழ்வு ஆகிய கொள்கைகளுக்கான எங்க ளது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி, அர் மீனியா பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கிறது” என அந்நாட்டு வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

பிரான்ஸ் நிறுவனத்தின்  உரிமம் ரத்து

நைஜர் நாட்டில் உள்ள சுரங்கங்களில் இருந்து யுரேனியம் உள்ளிட்ட கனிமங்களை எடுக்க பிரான்ஸ் நிறுவ னத்திற்கு கொடுக்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் காலனி ஆதிக்கத் திற்கு எதிராக நைஜர் ராணுவம் அந்நாட்டின் ஆட்சியை கைப்பற்றி வழிநடத்தி வருகிறது. இந்நிலையில் 2 லட்சம் டன் உலோகங்கள் இருக்கும் சுரங்கத்தில் இருந்து கனிமங்களை எடுக்கும் உரிமை ஒரனோ என்ற பிரான்ஸ் நிறுவனத்திற்கு மறுக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் வீரர்களுக்கு  ஐரோப்பா பயிற்சி

52ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய ராணுவ உதவி அமைப்பு பயிற்சி கொ டுத்ததாக உக்ரைன் அரசு செய்தி நிறுவனம் தெரி வித்துள்ளது. உக்ரைன் ராணுவம் புதியப் படைப் பிரிவை உருவாக்கி வரும் நிலையில் பயிற்சியை மேலும் நீட்டிக்குமாறு உக்ரைன்  துணைப் பாது காப்பு அமைச்சர் ஒலெக்சாண்டர் பாலனுட்சா ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தியுள்ளார். சிப்பாய்கள் முதல் அதிகாரிகள் வரை ஐரோப் பாவில் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.