world

img

தேசிய நாணயங்களில் வர்த்தகத்தை மேற்கொள்ளலாமா?

பெய்ஜிங், பிப்.6- பல்வேறு புதிய வர்த்தக உடன் பாடுகளில் சீனாவும், ரஷ்யாவும் கையெழுத்திட்டு வரும் நிலையில், இரு நாட்டு வர்த்தகத்தின்போது சீனா வின் யுவான் மற்றும் ரஷ்யாவின் ரூபிள் ஆகியவற்றைப் பயன்படு த்திக் கொள்வது பற்றி விவாதம் நடந்துள்ளது. பெய்ஜிங்கில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்சின் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, பல்வேறு பிரச்சனைகள் பற்றி சீன  ஜனாதிபதி ஜி ஜின்பிங்கைச் சந்தி த்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் விவாதித்துள்ளார். சீன மற்றும் ரஷ்ய இருதரப்பு உறவுகளை அசை க்க முடியாது என்று கருத்து தெரிவித்துள்ள இரு ஜனாதிபதி களும் கிழக்கு நோக்கிய தங்கள் விரிவாக்கத்தை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

எரிவாயு பரிமாற்றத்திற்கான புதிய உடன்பாட்டில் இருவரும் கையெழுத்திட்டுள்ளனர். தங்கள் இருதரப்பு வர்த்தக உறவுகள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த இருவரும் சர்வதேச செலாவணியாக இருக்கும் டாலர் பற்றியும் விவாதித்திருக் கிறார்கள். டாலரின் மதிப்பு திடீர் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரு வதால் பல நாடுகளுடனான இரு தரப்பு வர்த்தகம் பாதிப்படுவது பற்றி  இருவரும் கவலை தெரிவித்தனர்.

இந்த ஏற்ற இறக்கங்களை சமானி க்கவும், அதிலிருந்து தங்களைப் பாது காத்துக் கொள்ளவும் இரு நாடு களுக்கிடையிலான வர்த்தகத்தில் அவரவர் தேசிய நாணயங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று  ஜி ஜின்பிங்கும், புடினும் கருதியுள் ளனர். அதோடு, உக்ரைன் விவகா ரத்தைப் பயன்படுத்தி ரஷ்யாவின் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தில் ஈடுபட முடியாத அள வுக்கு தடைகளை ஏற்படுத்தப் போவ தாக அமெரிக்க அரசு மிரட்டி வரு கிறது. டாலரிடமிருந்து விடுதலை பெற்றால் என்ன என்று இருதரப்பு ஆலோசனை செய்துள்ளன.

பனிப்போர் அணுகுமுறை

ஜி ஜின்பிங் மற்றும் புடின் ஆகிய இருவரும் இணைந்து வெளியிட் டுள்ள அறிக்கையில், நேட்டோவின் விரிவாக்கத்திற்கு இரு நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அமெரிக்கா தலைமையிலான ராணு வக்கூட்டணி இந்தப் பகுதியில் பதற்ற த்தை உருவாக்கியுள்ளன. சர்வ தேச விவகாரங்களில் பனிப்போர் அணுகுமுறையை அமெரிக்கா தலை மையிலான கூட்டணி கடைப்பிடிக் கின்றன என்று கூறியுள்ளனர்.