world

img

சொந்த நாட்டு மக்களின் உரிமையை பறிக்கலாமா?

கத்தார் நாட்டில் கால்பந்திற்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. முதன்முறையாக தங்கள் நாட்டில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்படுவதால் அந்நாட்டு கால்பந்து ரசிகர்கள் பெருமையுடன் தங்களது லோகோவை பயன்படுத்தி  கொண்டாடி வருகின்றனர். ஆனால் “பணம்” என்ற மூன்று எழுத்து வார்த்தையில் அவர்களது  சந்தோசம், கொண்டாட்டம், பெருமை என அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது. வேறு நாட்டினர் லோகோ பயன்படுத்தினால் ஒரு குற்றமாக கத்தார் அரசு சினம் கொள்ளலாம். ஆனால் சொந்த நாட்டு மக்கள் தானே தங்களது உரிமையை பயன்படுத்துகின்றனர். முக்கியமாக அவர்களது வரிப்பணத்தில் தான் உலகக்கோப்பை நடத்தப்படுகிறது. அவர்களுக்கு இல்லாத உரிமை வேறு யாருக்கு கிடைக்கும். பணம் மற்றும் பிபா (சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின்) விதிகளால் கத்தார் மக்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

;