world

img

பிரிக்ஸ் நாணயம் மாதிரி வடிவம் வெளியானது

ஜோகன்னஸ்பர்க்: பிரிக்ஸ் நாடுகள்  கூட்டமைப்பின் மாநாடு ஆகஸ்ட் 22-24 தேதிகளில் தென் ஆப்பிரிக்கா தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. அதில் அர்ஜெண்டினா, சவூதி அரேபியா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் புதிய உறுப்பினர்களாக இணைக்கப்பட்டன.  இதனை தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம் இணைக்கப்பட்டதை கொண் டாடும் நிகழ்வில் தென்னாப்பிரிக்கா விற்கான ரஷ்யாவின் தூதர் இலியா ரோகச்சேவ், ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக  தலைவரான மஹாஷ் சயீத் அல் ஹமேலிக்கு 100 யூனிட் மதிப்பு கொண்ட ‘பிரிக்ஸ் நாணயத்தின்’ மாதிரி வடிவத்தை நினைவுப் பரிசாக வழங்கினார். நாணயத்தின் முகப்பில் வட்ட வடிவில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஐந்து உறுப்பு நாடு களின் கொடிகளும் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. அதன் பின்புறத்தில் அல் ஜீரியா, அர்ஜெண்டினா, பஹ்ரைன், பெலாரஸ், ​​வெனிசுலா, எகிப்து, ஜிம்பாப் வே, இந்தோனேசியா, ஈரான், கஜகஸ் தான், மெக்சிகோ மற்றும் நைஜீரியாவின்  கொடிகளும், ஆப்கானிஸ்தானின் கொடியும்  (தலிபான்களால் நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பு பயன்படுத்தப்பட்டது) மற்றும்  1972க்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வங்கதேச கொடி ஆகியவை இடம் பெற்றுள்ளன.