world

img

சதியில் உடந்தை

மாட்ரிட், ஜூன் 7- விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கேயைக் கொலை செய்ய நடந்த சதியில் தொடர்புள்ளது என்ற குற்றச்சாட்டு பற்றி விளக்குமாறு அமெரிக்காவின் முன்னாள் அமைச்சர் மைக் பாம்பியோவுக்கு ஸ்பெயின் தேசிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அசாங்கேயைக் கொலை செய்வதற்காக ஸ்பெயினில் உள்ள ஒரு பாதுகாப்பு நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டிருந்தது. இது குறித்து அந்நாட்டுக் காவல்துறை விசாரித்து, வழக்குப் பதிவு செய்தது. ஸ்பெயினின் தேசிய நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏதான் பயன்படுத்தியதாக வழக்கில் தெரிய வந்தது. இது குறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு அமெரிக்காவின் முன்னாள் அமைச்சர் பாம்பியோவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.