world

img

உலகம் முழுவதும் 29 கோடி மருத்துவ சிகிச்சைகள்

பெய்ஜிங்/அட்டிஸ் அபாபா,  ஆக.2- கடந்த 60 ஆண்டுகளில் உலகம் முழு வதும் பயணம் செய்து 29 கோடி மருத்துவ சிகிச்சைகளை எந்தவிதக் கட்டணமும் வசூலிக்காமல்  சீன மருத்துவக்குழுக்கள்  செய்திருக்கின்றன. ஏப்ரல் 6, 1963 ஆம் தேதியன்று சீனாவில் இருந்து அல்ஜீரியாவுக்கு சென்றதுதான் சீனாவின் முதல் மருத்துவக்குழுவாகும். அப்போதிருந்து கடந்த 60 ஆண்டுகளில் ஐந்து கண்டங்களிலும் உள்ள பல்வேறு நாடுகளில் மருத்துவ உதவியை சீனா செய்திருக்கிறது.  76 நாடுகளுக்கு பயணித்து மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவி லியர்கள் உள்ளிட்டவர்களின் எண்ணிக்கை  30 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. பல்வேறு நாடுகளில் உயிர் காக்கும் சிகிச்சையை சீன மருத்துவர்கள் குறித்த நேரத்தில் செய்துள்ளனர். கடந்த வாரத்தில் கூட, நோய் களுடனேயே தங்கள் உழைப்பைச் செலுத்தி வந்த 240 எத்தியோப்பியத் தொழி லாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்ய சீன மருத்துவக் குழுவினர் சென்றனர். அந்நாட்டின் தலைநகர் அட்டிஸ் அபாபா வில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள கிழக்குத் தொழில் மண்ட லத்தில் பணிபுரிந்து வந்த அந்த 240 தொழி லாளர்களுக்கும் முழுமையான மருத்து வப் பரிசோதனையும், அவர்களைத் தாக்கி யுள்ள நோய்களுக்கு மருந்து உள்ளிட்ட வையும் கிடைத்தன.

சிகிச்சை பெற்றவர்களில் ஒருவரான தாரிகு மமோ, “நான் நீண்டகாலமாக கால்வலியால் அவதிப்பட்டு வந்தேன். முழுமையான ஸ்கேன் செய்தார்கள். இது பெரிய பிரச்சனை கிடையாது என்று  சொன்னார்கள். வலி போவதற்கு என்ன  செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி னார்கள். இப்படிப் பலருக்கும் தேவை யான மருத்துவ அறிவுரைகள் தரப் பட்டுள்ளன. எங்களுக்குப் பெரும் உத வியை சீன மருத்துவர்கள் குழு செய்தி ருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார். 36 மருத்துவர்களைக் கொண்ட இந்த சீன மருத்துவக்குழு, எத்தியோப்பி யாவுக்கு செல்லும் 24வது மருத்துவக் குழு வாகும். மேலும் தலைநகர் அட்டிஸ்  அபாபாவில் மிகப்பெரிய பொது மருத்துவ மனையையும் கட்டிக் கொடுத்திருக் கிறார்கள். மருத்துவக்குழுக்களில் சிறப்பு மருத்துவர்களும், வல்லுநர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த அனைத்து மருத்துவ சிகிச்சைகள், மருந்து கள், அறிவுரைகள் உள்ளிட்ட அனைத்துமே கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாமல் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத் தக்கதாகும். ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணி புரியும் மாமே யடேடா, “இந்த இலவச  சிகிச்சை எங்களுக்கு மிகவும் முக்கிய மானது. மேலோட்டமாக சோதிக்காமல் முழு உடல் பரிசோதனை செய்து, குறித்த நேரத்தில் சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். மிகவும் தேவையான வசதி கள் கிடைக்கின்றன” என்று குறிப்பிடு கிறார். உரிய நேரத்தில் கிடைத்த மருத்துவ வசதிகள் என்றுதான் பெரும்பாலான பயனாளிகள் தெரிவிக்கிறார்கள்.

தொடர் சிகிச்சைகள்

இந்த 24வது சீன மருத்துவக்குழு வுக்குத் தலைவராக இருக்கும் சென் ஜாவோகி, “இலவசமாக தரப்படும் இந்த  மருத்துவ ஆதரவைத் தாண்டி, கூடுதல் மருத்துவப் பரிசோதனை மற்றும் அடுத்த டுத்து செய்ய வேண்டிய மருத்துவ சிகிச்சை கள் ஆகியவற்றையும் செய்து தரப் போகிறோம். திருனேஷ்-பெய்ஜிங் மருத்துவமனையில்தான் எங்கள் குழு முகாமிட்டிருக்கிறது. சிகிச்சை தேவைப் படக்கூடியவர்களை அங்கு வரவழைத்து சிகிச்சைகள் தரப்போகிறோம்” என்றார். இந்த மருத்துவமனையில் 1974 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து சீன மருத்துவக்குழுக்கள் தங்கியிருந்து மருத்துவ சேவைகளை வழங்கி வருகின் றன. தற்போது உலகம் முழுவதும் 57  நாடுகளில் 115 இடங்களில் சீன மருத்துவக் குழுக்கள் தங்கி மருத்துவ உதவிகளை மேற்கொண்டு வருகின்றன. இவற்றில் பாதி க்கும் மேற்பட்ட இடங்கள் மக்கள் விரை வில் அணுகமுடியாத பகுதிகளில் உள்ளன.

டிரம்ப் மீது குற்றச்சாட்டு

வாஷிங்டன், ஆக.2- 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் முடிவுகளை தலைகீழாக மாற்ற முயற்சித்ததாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியுற்ற டொனால்டு டிரம்ப், அப்போது ஜனாதிபதியாகப் பதவி வகித்ததால், தேர்தல் முடிவை மாற்ற முயற்சித்தார். பல்வேறு உயர் ரகசிய ஆவணங்களை அதற்காகத் தவறாகப் பயன்படுத்தினார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்க சிறப்பு வழக்கறிஞர் ஜாக் ஸ்மித் கூறியுள்ளார்.  ஜாக் ஸ்மித் குற்றச்சாட்டு பற்றி ஜனாதிபதி மாளிகையில் இருந்து கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கனவே டிரம்ப் பற்றிக் கருத்து தெரிவித்த தற்போதைய ஜனாதிபதி பைடன், “டிரம்ப் நாட்டுக்கு ஆபத்தானவர்” என்று கூறியிருந்தார். அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட டிரம்ப் முயற்சி செய்து வருகிறார்.