world

img

அமெரிக்கா - துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு 20 ஆயிரம் பேர் பலி

வாஷிங்டன், ஜன.17- கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக் காவின் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு 20 ஆயிரத்து 658 பேர் பலியாகி இருக் கிறார்கள் என்று தகவல்கள் வெளி யாகியுள்ளன. அமெரிக்காவில் துப்பாக்கிகளை வைத்திருப்பது சர்வசாதாரணமான நிகழ்வாக உள்ளது. அதன் விற் பனையும் அமோகமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் துப்பாக்கிச் சூடுகள் நடப்பது அதிகரித்தே வந்துள் ளன. 2019 ஆம் ஆண்டோடு ஒப்பிடு கையில் 2021 ஆம் ஆண்டில் 24 விழுக் காடு அதிக அளவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. கொலைகளும் பெருமளவில் அதிக ரித்துள்ளன. கன் வயலன்ஸ் ஆர்கிவ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின்படி, 2021 ஆம் ஆண்டில் மக்கள் கூடும் இடங்களில் கூட்டத்தை நோக்கி சுட்ட சம்பவங்களின் எண் ணிக்கை மட்டும் 691 ஆக இருந்திருக்கி றது. தனிப்பட்ட முறையில் ஒன்று மேயில்லாத காரணங்களுக்காகவும் பலர் துப்பாக்கிச்சூட்டை நடத்தி யுள்ளனர்.

கூட்டத்தை நோக்கி கண் மூடித்தனமாக சுட்டவர்களில் சில மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருந்திருக்கின்றனர். அவர்கள் வசம் துப்பாக்கியும் அதற்கான உரிமமும் கூட இருந்தன. நடப்பாண்டிலும் இந்த துப்பாக்கிக் கலாச்சார அவலம் தொ டர்கிறது. இதுவரையில் கூட்டங்களை நோக்கி சுட்ட சம்பவங்கள் 17 முறை நிகழ்ந்திருக்கின்றன. முதல் நான்கு நாட்களிலேயே 400 பேர் உயிர் இழந்த னர். தற்போது அந்த எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. இரண்டு நாட்க ளுக்கு முன்பாக ஒரேகான் மாகா ணத்தில் உள்ள யூஜின் என்ற நகரில் நிகழ்ச்சி ஒன்றின்போது சரமாரியாக ஒருவர் சுட்டிருக்கிறார். இதில் ஆறு பேர் காயமடைந்தனர். ஒருவர் உயி ருக்குப் போராடி வருகிறார். சந்தே கத்துக்குரிய நபர் ஒருவரை அடையா ளம் கண்டுள்ளனர். ஆனால் யாரும் இதுவரையில் கைது செய்யப்பட வில்லை. அமெரிக்காவின் உயர்மட்ட அளவில் இந்தத் துப்பாக்கிக் கலாச்சா ரம் பற்றிய விவாதம் நடந்தாலும் பிரச் சனைக்குத் தீர்வு எட்டப்படவில்லை. கடந்த ஜூன் மாதத்தில்  சட்ட ஒழுங்குத் துறையைச் சேர்ந்த பல்வேறு அதிகாரி களுடன் ஜனாதிபதி ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பிரச்சனையை எப்படிக் கட்டுக்குள் கொண்டு வருவது என்று அவர் விவாதித்தார். உலகிலேயே அதிக மான நபர்கள் துப்பாக்கிகளை வைத்தி ருப்பது அமெரிக்காதான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

;