world

img

தீக்கதிர் உலக செய்திகள்

சூடான் உள்நாட்டுப் போரில்  17 ஆயிரம் பேர் பலி 

சூடான் உள்நாட்டுப் போரில் 17 ஆயிரம் மக்கள் படுகொலையாகியுள்ளனர்.   மேலும் இந்த போரினால் நேரடி வன்முறை, பஞ்சத்தினால் பெண்களும் குழந்தைக ளுமே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த உள்நாட்டுப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க ஐ.நா. பாதுகாப்பு அவை முயற்சித்து வருகிறது எனி னும் சவூதி அரேபியா, அதிரடிப் படைகளுக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை கொடுத்து ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சைப்ரஸுக்கு மீண்டும்  ஹிஸ்புல்லா எச்சரிக்கை

சைப்ரஸ் தனது ராணுவத் தலங்களையும் விமான நிலையங்களையும் இஸ்ரேல் பயன்படுத்த அனுமதிப்பதற்கு ஹிஸ்புல்லா அமைப்பு மறுபடியும் எச்சரிக்கை விடுத்துள்ளது. லெபனான் நாட்டின் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் சைப்ரஸ் நாட்டை பயன்படுத்திக் கொள்கிறது. மேலும் இஸ்ரேல் ராணுவத்திற்கு சைப்ரஸ் முழு ஒத்துழைப்பும் வழங்கி வருகிறது.ஏற்கனவே ஹிஸ்புல்லா இதனை குறிப்பிட்டு சைப்ரஸ்க்கு எச்சரிக்கை விடுத்த நிலையில் தற்போது மீண்டும் ஹிஸ்புல்லா தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மோசமான மனிதாபிமான  நெருக்கடியில் சூடான் 

சூடானின் உள்நாட்டுப் போர்  6 லட்சம் சூடானியர்களை அகதிக ளாக  மாற்றியுள்ளதாக  ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. போரால் பெண்கள் மற்றும் குழந்தைகள்  பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 லட்சத்து 50  ஆயி ரத்துக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக சாட் நாட்டிற்குள் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாடு மோசமான மனிதாபிமான நெருக்கடியை சந்தித் துள்ளதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

உலகப் பொருளாதார மன்ற  கூட்டத்தில் சீனா மீதான கவனம்

பெய்ஜிங் :  15ஆவது கோடைக்கால டாவோஸ் மன்றக் கூட்டம் தற்போது சீனாவின் டா லியேன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் செயற்கை நுண்ணறிவு, முன்னேறிய அறிவியல் தொழில் நுட்பம் முதலியவை குறித்த சொற் பொழிவு மற்றும் விவாதம் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில், சீனா மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பு, பன்னாட்டு விருந்தினர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் செயல் இயக்குநர் மிரேக் டுசெக் இது பற்றி கூறுகையில், சீனாவுடன் உண்மை யான தொடர்பை ஏற்படுத்தி, சீன பொருளாதார வளர்ச்சி யின் முதன்மை பணிகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். 2024ஆம் ஆண்டின் 10 புதிய தொழில் நுட்பங்கள்  பற்றிய அறிக்கை, இம்மன்றக் கூட்டத்தில் வெளியிடப் பட்டது. உள்ளார்ந்த ஆற்றல் கொண்ட 10 தொழில் நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சீனாவின் புதிய தொழில் நுட்பங்கள் ஏற்படுத்திய புதிய தொழில்கள், புதிய முறைமைகள் மற்றும் புதிய உந்து சக்திகள், வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு வாய்ப்புகளைக் கொண்டு செல்லும் என்று பன்னாட்டு விருந்தினர்கள் தெரிவித்தனர்.

ஜப்பான் பிரதமர் பதவி விலக  விரும்புவோர் விகிதம் அதிகரிப்பு

.டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அமைச்சரவைக்கான ஆதரவு விகிதம் குறித்து ஜப்பானின் மெயினிச்சி சிம்பன் (Mainichi Shimbun) நாளேடு அண்மையில் ஒரு செய்தி வெளியிட்டது.  இதில் 17 விழுக்காடு மக்கள் மட்டுமே பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அமைச்சர வைக்கு ஆதரவளித்துள்ளனர். கடந்த மாதம் இருந்ததை விட 3 விழுக்காட்டு ஆதரவு குறைந்துள்ளது. அவரது அமைச்சரவைக்கு ஆதர வளிக்காதவர்களின் விகிதம் 77 விழுக்காடாகும். இது கடந்த மாதம் இருந்ததை விட 3 விழுக்காடு அதிகமாகும். இதையடுத்து பிரதமர் ஃபுமியோ கிஷிடா பதவி விலக வேண்டும் என்று ஜப்பான் லிப்ரல் ஜனநாய கக் கட்சியில் குரல் எழுப்பியுள்ளது. ஃபுமியோ கிஷிடா தொடர்ந்து பிரதமராக பதவி வகிக்க மாட்டார் என்று பெரும்பாலானோர் விருப்பம் தெரி வித்தனர். குறைந்த ஆதரவு விகிதம் இருப்பதால், எதிர்க்கட்சியிலும் ஆளும் கட்சியிலும் ஃபுமியோ கிஷிடாவுக்கு எதிர்ப்புக் குரல் வலுத்து வருகிறது.

நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மனித நேய உதவித் திட்டம்

நியூயார்க்: இந்த ஆண்டு ஐ.நா. மனித நேய உதவித் திட்டத்திற்கு 4800 கோடி அமெரிக்க டாலர் நிதி தேவை. ஆனால், நாடுகள் நிதி வழங்குவதற்கான காலம் ஏறக்குறைய பாதி நாட்கள் கடந்து விட்டது. நன்கொடை யாளர்கள் உதவித் திட்டங்களுக்கு 800 கோடி அமெரிக்க டாலர்களை மட்டுமே வழங்கியுள்ளனர் என்று ஐ.நா. தலைமைச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் ஜூன் 25ஆம் நாள் கூறினார்.  ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் நடத்திய மனித நேயம் தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்து குட்டரெஸ் நிகழ்த்திய காணொலி உரையில் இவ்வாண்டு ஜெனீவா பொது ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும்.  ஆனால் மோதல், போரின் விதிகளை புறக்கணித்தல்,  கட்டுப்பாட்டில் இல்லாத காலநிலை நெருக்கடி ஆகியவை மனிதகுலத்திற்கு பயங்கரமான துன்பத்தை ஏற்படுத்து கின்றன. பசி மற்றும் வீடுவாசலின்றி ஆகிய அச்சுறுத்தல்க ளை எதிர்கொள்ளும் லட்சக்கணக்கான மக்களுக்கு, அவர்களின் ஒரே ஒரு எதிர்பார்ப்பு இந்த மனித நேய உதவி யாகும் என்றார்.

;