world

img

அடிக்கடி மாறும் ஒமைக்ரான் அறிகுறிகள்... புதிய அறிகுறியாக "பசியின்மை"

லண்டன் 
கொரோனா வைரஸ் மனித உடலுக்குள் புகுந்தால் சளி, காய்ச்சல், வாசனை இழப்பு போன்ற பொதுவான அறிகுறிகளை மட்டுமே இதுவரை காண்பித்து வருகிறது. டெல்டா வகை வைரஸ் புதிய அறிகுறிகளை தொடக்கத்தில் காட்டினாலும் அதன் பிறகு பொதுவான அறிகுறிக்கு மாறியது. ஆனால் தற்போது உலகை மிரட்டி வரும் ஒமைக்ரான் சற்று மாறுபட்ட அறிகுறிகளை காண்பித்து வருகிறது. அதாவது அடிக்கடி அறிகுறிகள் மாறிக்கொண்டே இருக்கிறது. மிதமான அறிகுறிகள் இருப்பதால் மக்கள் சாதாரண காய்ச்சல் என்று விட்டு விடுகின்றனர்.

முக்கியமாக சிலருக்கு மட்டுமே பொதுவான அறிகுறிகள் தென்படுகின்றன. சிலருக்கு இதுவரை இல்லாத அறிகுறிகள் தென்பட்டுள்ளன. தற்போது புதிய அறிகுறியாக "பசியின்மை" பிரச்சனையும் நுழைந்துள்ளது. 

ஒமைக்ரான் பாதித்தால் உண்டாகும் பொதுவான அறிகுறிகள்:
மிதமான காய்ச்சல்,உடல் சோர்வு,தொண்டை வலி, தொண்டை கரகரப்பு,கடுமையான உடல் வலி இதனுடன் "பசியின்மை" புதிய அறிகுறிகளாக சேர்க்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் பதிவுகளின்படி கொரோனாவைப்போல் ஒமைக்ரான் பாதித்தால் சுவை இழப்பு, வாசனை இழப்பு இல்லை என இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

;