world

img

“ஒமிக்ரான்” தாக்கத்தை பற்றி கண்டறிவது கடினமாக உள்ளது – தென் ஆப்ரிக்கா விஞ்ஞானிகள்  

புதிய உருமாறிய கொரோனா வைரசின் உண்மையான தாக்கத்தை தற்போது கண்டறிவது கடினமாக உள்ளது என முன்னணி தென் ஆப்ரிக்கா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  

தென் ஆப்ரிக்கா - ஓமிக்ரான் வைரஸ், லேசான அளவிலேயே உடல் நலத்தை பாதிக்கிறது என்ற முடிவுக்கு வந்து விட முடியாது என முன்னணி தென் ஆப்ரிக்கா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விஞ்ஞானிகள் விளக்குகையில், புதிய உருமாறிய கொரோனா வைரசின் உண்மையான தாக்கத்தை தற்போது கண்டறிவது கடினமாக உள்ளது. ஏனெனில் இதனால் பெரும்பாலான இளைஞர்கள் பாதித்துள்ளனர். அவர்கள் நோய்க்கிருமியை எதிர்த்து போராட முடியும். மேலும் சில காலம் வைரசால் பாதித்த பிறகும் மக்கள் நோய்வாய்ப்படுவார்கள் என்றனர்.  

அதனை தொடர்ந்து பொது சுகாதார கண்காணிப்பு மற்றும் மீட்புத்துறை தலைவர் மிச்செல் க்ரூம் கூறுகையில், சமீபத்திய நோய்த்தொற்றுகள் பெரும்பாலும் இளைய வயதினரிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த நகர்வை நாங்கள் முதியவர்களிடையேயும் பார்க்கத் தொடங்குகிறோம் என்றார். அதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க தென் ஆப்ரிக்கா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

;