world

img

ரஷ்யா-உக்ரைன் போர்: எரிபொருட்கள் விலை உயர்வு- திணறும் ஆப்பிரிக்கா

உக்ரைன் நெருக்கடியால் எரிபொருள் விலைகள் உயர்வு மற்றும் அதைத் தொடர்ந்து போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிப்பு ஆகியவற்றால் ஆப்பிரிக்க நாடகள் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கின்றன.

நெருக்கடியைச் சமாளிக்கப் பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பரிந்துரை செய்துள்ளதாக ஆப்பிரிக்க ஒன்றியம் அறிவித்திருக்கிறது. நெருக்கடிகளைச் சமாளிக்க ஒரு அசாதாரண கூட்டமொன்றிற்கு ஆப்பிரிக்க ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. ஜூன் 14 முதல் 16 ஆம் தேதிவரையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், "இரட்டை நெருக்கடியை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் ஆப்பிரிக்க ஒன்றியம் உள்ளது. முதலில் கொரோனா தொற்று தாக்கியது. அதிலிருந்து மீளுவதற்குள் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என்று விவாதித்திருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளனர்.