world

img

நைஜீரியா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: 100க்கும் மேற்பட்டோர் பலி  

நைஜீரியாவில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 100க்கும் மேற்பட்டோர்  பேர் பலியாகியுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

நைஜீரியாவில் பல இடங்களில் சட்டவிரோதமாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நைஜீரியாவின் தெற்கு மாநிலமான இமோவில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உடல் கருகி உயிர் இழந்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இதையடுத்து தீவிபத்து ஏற்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளர் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;