world

img

எத்தியோப்பியா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 157 ஆக உயர்வு!

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கிப் உயிரிழந்தோர் எண்ணிக்கை 157ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 21ஆம் தேதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் பெய்த கடும் மழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் பலர் உயிரிழந்தனர். திங்கள்கிழமை 55-ஆக இருந்த பலி எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 157 ஆக உயர்ந்துள்ளது.அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கோபா மண்டல தகவல் தொடர்பு அலுவலகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

திங்கள்கிழமை காலை முதல் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சேற்றில் சிக்கிய 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவினால் பலர் தங்கள் சொந்தங்களை இழந்துள்ளனர். மேலும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்