world

img

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் மோசமாகி வரும் சூழ்நிலை...

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகம் வெளியிட்ட போர் திட்டத்தின் செலவு பற்றிய புள்ளிவிவரங்களின்படி, 2001ஆம் ஆண்டிலிருந்து, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தொடுத்த போரில் சுமார் 2 லட்சத்து 41 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அவர்களில் 71 ஆயிரத்துக்கும் மேலானோர் அப்பாவி மக்கள் ஆவர்.ஆப்கானிஸ்தானில் மனித நேய நெருக்கடி கடுமையாக உள்ளது. மோசமாகி வருகின்ற மோதல் காரணமாக அப்பாவி மக்கள் வீடு வாசலின்றி அல்லல்பட்டு வருகின்றனர் என்று ஐ.நாவின் அகதிகள் அமைப்பு கடந்த ஜூலை மாதம் நடத்திய செய்தியாளர் கூட்டம் ஒன்றில் தெரிவித்துள்ளது.

ஐ.நா வெளியிட்ட தொடர்புடைய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 20 ஆண்டுகளில், ஆப்கானிஸ்தானில் குறிப்பிட்ட வளர்ச்சி காணப்பட்டுள்ளது என்ற போதிலும், சில முக்கிய குறியீடுகள் மோசமாகி உள்ளன. தற்போது, ஆப்கானிஸ்தானில் நபர்வாரி மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு உலகளவில் 213 ஆவது இடத்தில் உள்ளது. வேலைவாய்ப்பில்லா விகிதம் 50 விழுக்காட்டையும் வறுமை விகிதம் 70 விழுக்காட்டையும் தாண்டியுள்ளது. அந்த நாட்டில் மனிதர்களின் சராசரி ஆயுள் காலம் 53.25 வயது மட்டுமே.2001ஆம் ஆண்டு அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் போர் தொடுத்தது. ஆனால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு சூழ்நிலையில் வளர்ச்சி இல்லை. மேலும் மோசமாகவே மாறி வருகிறது.

;