districts

img

கோவை: சட்டவிரோதமாக யானை தந்தம் விற்க முயன்ற நான்கு பேர் கைது!

கோவை வடவள்ளி அருகே சட்டவிரோதமாக யானைத் தந்தம் விற்க முயன்ற  இருவரை வனத்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து யானைத் தந்தத்தைப் பறிமுதல் செய்தனர். 

கோவை வடவள்ளி பகுதியில் சட்டவிரோதமாக யானைத் தந்தத்தை விற்க முயற்சி நடப்பதாகக் கோவை வனச்சரக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரகர் திருமுருகன் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் வடவள்ளி அருகே ரோந்து சென்றனர். அப்போது வடவள்ளியை சேர்ந்த பிரிட்டோ (43), செல்வராஜ் (38) ஆகிய இருவரைச் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது யானைத் தந்தத்தை விற்க முயன்றதை ஒப்புக்கொண்டனர். 

இதையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில் சாய்பாபா காலனி சேர்ந்த விசாகன் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவருடன் சேர்ந்து யானைத் தந்தத்தைச் சட்டவிரோதமாக விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து சாய்பாபா காலனி பகுதியில் உள்ள விசாகன் வீட்டிலிருந்த யானைத் தந்தத்தை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தலை மறைவான விசாகன் மற்றும் கார்த்திகேயனைத் தனிப்படை அமைத்து வனத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.  மேலும் பிடிபட்ட பிரிட்டோ செல்வராஜ் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

;