world

img

மால்கம் எக்ஸ் கொலையாளி யார்? புதிய தகவலால் அமெரிக்காவில் பரபரப்பு  

நியூயார்க், நவ.18-

அமெரிக்காவின் கறுப்பின தலைவராக அறியப்பட்ட மால்கம் எக்ஸ்-யின் கொலையில் தண்டிக்கப்பட்ட நபர்கள் குறித்த கிடைக்கப்பட்ட புதிய தகவலால் அந்நாட்டில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

மால்கம் எக்ஸ்- அமெரிக்க நாட்டின் கருப்பின மக்களால் கொண்டாடப்பட்ட தலைவர். மிகச் சிறந்த பேச்சாளர். அந்நாட்டில் நிலவி வந்த நிறவெறி கொடுமைகளுக்கு எதிராகவும், வெள்ளையின ஆதிக்கத்திற்கு எதிராகவும் மக்களை வெகுண்டெழச் செய்தவர். அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கும், அரசிற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கியவர்.  

இவர் கடந்த 1965 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதியன்று நியூயார்க் சிட்டியின் மன்ஹாட்டன் நகரில் பெரும் மக்கள் கூட்டத்திற்கிடையே தனது எழுச்சியுரையை ஆற்றிக் கொண்டிருந்தபோது சில நபர்களால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அந்நாளில் அந்நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் அந்நகர காவல்துறையால் முகமது அஜிஸ், கலில் இஸ்லாம், அப்துல் ஹலிம் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்ட நிலையில் மூவருக்கும் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் சுமார் 20 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு முகமது அஜிஸ் மற்றும் கலில் இஸ்லாம் ஆகிய இருவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.  

இத்தகைய சூழலில் மேற்குறிப்பிட்ட நபர்கள் இருவரும் குற்றமற்றவர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக புதிய ஆதாரங்கள் வெளியாகி அந்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. குறிப்பாக, மால்கம் எக்ஸ் கொலையில் அந்நாட்டின் புலனாய்வு அமைப்பான எப்பிஐ மற்றும் நியூயார்க் நகர காவல்துறை சம்மந்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய தகவலால் அந்நாட்டின் சட்ட நடைமுறைகள் பெரும் கேள்விக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக, செய்யாத குற்றத்திற்காக கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை மேற்குறிப்பிட்ட இருவரும் சிறையில் கழித்திருக்கும் நிலையில், அவர்களது குடும்பத்தாரிடம் அந்நாட்டு அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.    

;