தென்கொரிய தொழிலாளர்களை நாடு கடத்திய அமெரிக்கா
அமெரிக்காவில் போதிய ஆவணங்கள் இல்லை என கைது செய்யப்பட்ட தென்கொரிய தொழிலாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரம் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஹூண்டாய்-எல்ஜி பேட்டரி தொழிற்சாலையில் 475 தொழிலாளர்கள் போதிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் இருந்ததற்காக திடீரெனகைது செய்யப்பட்டனர். இதில் 300 க்கும் மேற்பட்டவர்கள் தென்கொரியர்கள். அவர்களை தற்போது அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது.
உக்ரைன் டிரோன் தாக்குதல்: சுட்டு வீழ்த்திய ரஷ்யா
ரஷ்யாவும் உக்ரைனும் சமீப காலமாக அதி களவிலான டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் 221 டிரோன்களை ரஷ்யாவின் லெனின்கிராடு, பிரையன்ஸ்க், ஸ்மோலென்ஸ்க் ஆகிய நகரங்களின் மீது ஏவிய நிலையில் அதனை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதற்கிடையில் போலந்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு நேட்டோவை போருக்குள் தள்ள முயற்சிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அரசு வீட்டை காலி செய்த முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச
தேர்தல் வாக்குறுதியின்படி தற்போது இலங்கையில் ஆட்சியில் இருக்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை ரத்து செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதையடுத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்புநகரில் உள்ள அரசு வீட்டை காலி செய்து வெளியேறினார். இலங்கையில் முன்னாள் ஆட்சியாளர்கள் அதிகளவிலான ஊழல் செய்ததுடன் தற்போது அரசு பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
காசாவில் தீவிரமடையும் ஊட்டச்சத்து குறைபாடு
காசாவில் கடந்த ஜூலை மாதம் கடு மையான ஊட்டச்சத்து குறைபாடுடன் அடையாளம் காணப்பட்ட பாலஸ்தீன குழந்தைகளின் அளவு 8.3 சதவீதமாக இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 13.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஐ.நா குழந்தைகள் நிதியம் அறிவித்துள்ளது. உணவுப் பொருட்களை தடுப்பது, குழந்தைகளுக்கான உயிர் காக்கும் சிகிச்சைகளை தடுப்பது, தொடர் குண்டு வீச்சு உள்ளிட்ட காரணங்களால் குழந்தைகள் பாதிக்கப்படும் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
நேபாள வன்முறை பலி எண்ணிக்கை அதிகரிப்பு
நேபாளத்தில் இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாற்றப்பட்ட நிலையில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. முதலில் போராட்டக்காரர்களை ஒடுக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் உயிரி ழந்திருந்தனர். சுமார் 1,300 பேர் படுகாய மடைந்துள்ளனர். தற்போது காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
தீவிரமடையும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம் : தடுக்க மறுக்கும் ஆஸ்திரேலிய அரசாங்கம்
கான்பெர்ரா, செப்.12- ஆஸ்திரேலியாவில் கடந்த இருபது ஆண்டு களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த வெறுப்புப் பிரச்சாரத்தை தடுக்க அரசு முறையாக எந்த நட வடிக்கையையும் எடுக்கவில்லை. அதில் அரசு தோல்விடைந்து விட்டது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய வெறுப்பி ற்கு எதிரான போராட்டம் என்ற அமைப்பு ஆஸ்திரேலியாவில் கடந்த ஓர் ஆண்டாக நடத்திய ஆய்வின் அடிப்படையில் அவ்வமைப்பின் சிறப்புத் தூதர் அஃப்தாப் மாலிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பு அதிகரித்து வரும் சூழல் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதனை தீர்க்கவும் சரி செய்யவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக அந்த உண்மை நிலை புறக்கணிக்கப்படுவதா கவும் மறுக்கப்படுவதாகவும் அஃப்தாப் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார். உலகம் முழுவதும் வலதுசாரிக் குழுக்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதைப் போல வே ஆஸ்திரேலியாவிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவிலும் இஸ்லாமிய வெறுப்பானது நிறுவன மயமாக்கப்பட்டு மற்றும் கட்டமைப்பு ரீதியாக திட்டமிட்டு உருவாக்கப் பட்டுள்ளது. மிக வெளிப்படையாக இஸ்லாமியர்களைப் பற்றி மிகவும் அருவருப்பான, வெறுப்பு நிறைந்த சுவரொட்டிகளை ஓட்டுவது. அவர்களது வீடு உள்ளிட்ட சொத்துக்களை தாக்கி பொருளா ாரத்தைச் சிதைப்பது, இஸ்லாமியர்களை தாக்கு வது, கொச்சையாகத் திட்டுவது உள்ளிட்ட வன் முறைகளை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் தினந்தோறும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாக மாறிவிட்டன. இந்த வெறுப்புப் பிரச்சாரத்தை சரி செய்ய அரசாங்கம் சரியான நட வடிக்கைகளை எடுக்காத காரணத்தால் தான் இந்த இருபது ஆண்டுகளாக இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. வெறுப்புப் பேச்சுக்குப் பொறுப்பேற்பதை உறுதி செய்ய வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அதிக ஆதரவு தரவேண்டும், வெறுப்பு பிரச்சா ரத்தை தூண்டியவர்கள் கடுமையான தண்டைக ளுக்கு உட்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 54 பரிந்துரைகள் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கும் அரசுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் வெறுப்புப் பிரச்சாரத்தை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.