அமெரிக்காவில் சமூகவலைதளங்களை கையாள்வது தொடர்பான புதிய பாடப்பிரிவு அறிமுகமாகி, இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தில் "டிக்-டாக் வகுப்பு" என்ற பெயரில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது தொடர்பான பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வகுப்பில், சமூக வலைதளங்களில் கண்டென்ட் கிரியேஷன், டிஜிட்டல் மார்க்கெட்டிங், பின்தொடர்பவர்களை (Followers) ஈர்க்கும் வகையில் பதிவிடும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இது, இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.