கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் விலைகள் எகிறியுள்ளன. அடுத்த மாதத்தில் அமெரிக்காவின் தலைமை வங்கியின் வட்டி விகித அறிவிப்பில் அதிகரிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டு வாடகை, மின்சாரம் மற்றும் உணவு ஆகியவற்றிற்கான கட்டணம் அதிகரித்துள்ளன. நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அமெரிக்காவின் பொருளாதாரம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகப் புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.