world

img

அர்ஜெண்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து அர்ஜெண்டினா தேசிய பேரிடர் மேலாண்மை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “சான் ஜுவான் மாகாணத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்க அதிர்வுகள் நாட்டின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை
 

;