அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸின் பாதுகாப்புத்துறை ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சாந்தி சேத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த சாந்தி சேத்தாவின் தந்தை இந்தியாவிலிருந்து 1960களில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். பின்னர் ஜார்ஜ் வாஷிங்க்டன் பல்கலைகழகத்தில் சர்வதேச அரசியல் துறையில் சாந்தி சேத்தி முதுகலை பட்டம் பெற்றார். இதையடுத்து சாந்தி சேத்தா அமெரிக்க கடற்படையில் 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.
சாந்தி சேத்தா கடந்த 2010 முதல் 2021 வரை அமெரிக்க போர் கப்பல் ஒன்றின் தளபதியாக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு அதிகாரப்பூர்வமாக பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்க கடற்படை கப்பலின் முதல் பெண் தளபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.