world

img

ஆஸ்கர் விருதுகள் - 2023

தமிழ் ஆவணக் குறும்படத்திற்கு மாபெரும் அங்கீகாரம்

சர்வதேச அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகவும், மிகப்பெரிய கவுரவமாகவும் கருதப்படும் “அகாடமி விருது” எனப்படும் ஆஸ்கர் விருதின்  95-வது விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி திங்களன்று அதிகாலை (அமெரிக்க நேரப்படி ஞாயிறன்று இரவு) தொடங்கியது. அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளரான ஜிம்மி கிம்மல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில், இந்திய நடிகை தீபிகா படுகோனா விருது நிகழ்வு தொகுப்பாளராகவும் ஆஸ்கர் விருது மேடையில் தோன்றினார். யானைகளை பராமரிக்கும் தமிழ் ஆவண குறும்படமான “தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்” ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. தாயை பிரிந்து தவித்த 2 குட்டி யானைகளை பராமரிக்கும் நீலகிரியின் முதுமலையை சேர்ந்த பொம்மன், பொம்மி தம்பதி குறித்த கதைக்கருவான “தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்”ஆவண குறும்படத்தை இயக்கிய கார்திகி குன்செல்வெஸ், தயாரிப்பாளர் குனெட் (இருவரும் பெண்கள்) மொன்கோ ஆகியோர் ஆஸ்கர் மேடையில் விருதினை பெற்றனர்.

“ஆர்ஆர்ஆர்” திரைப்படத்தின் “நாட்டு நாட்டு” பாடலுக்கு ஆஸ்கர் விருது

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அலியா பட் நடிப்பில் வெளியான “ஆர்ஆர்ஆர்” திரைப்படத்தின் “நாட்டு நாட்டு” பாடல் சிறந்த “ஒரிஜினல்” பாடலுக்கான ஆஸ்கா் விருதை வென்றுள்ளது. கீரவாணி இசையில் மரகதமணி இசையமைப்பில் “நாட்டு நாட்டு” பாடல் ஏற்கெனவே கோல்டன் குளோப் விருதை வென்ற நிலையில்,  தற்போது ஆஸ்கர் விருதுடன் திரையுலகில் மீண்டும் ஒரு வரலாற்று விருதினை பெற்று அசத்தி யுள்ளது “நாட்டு நாட்டு” பாடல். இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆஸ்கர்  மேடையில் விருதினை வாங்கினர். விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு முன்னதாக ஆஸ்கர் நிகழ்ச்சி மேடையில் பாடகர்கள் ராகுல் சிப்லிகுஞ்ச், கால பைரவா ஆகியோர் “நாட்டு நாட்டு” பாடலை பாட கலைஞர்கள் நடனமாடினர்.

7 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய “எவ்ரிதிங் எவ்ரிவேர்” திரைப்படம்

சீனக் குடியேற்றவாசி பெண் ஒருவர் காவிய சாகசத்தில் விருப்பமில்லாமல் அதில் சிக்கிக்கொண்டு மீண்டு வரும் கதையை பற்றிய அமெரிக்க திரைப்படமான “எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்” திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

“எவ்ரிதிங் எவ்ரிவேர்” திரைப்படம் வென்ற ஆஸ்கர் விருதுகள்:

1. சிறந்த திரைப்படம்
2. சிறந்த இயக்குநர் - டேனியல் குவான், டேனியல் ஷீனெர்ட்
3. சிறந்த நடிகை - மிசெல் இயோ
4. சிறந்த துணை நடிகை - ஜேமி லீ கர்டிஸ்
5. சிறந்த துணை நடிகர் - கே ஹுய் குவான்
6. சிறந்த திரைக்கதை - டேனியல் குவான்,டேனியல் ஷீனெர்ட்
7. சிறந்த படத்தொகுப்பு - பால் ரோஜர்ஸ் 

எனினும் “எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்” திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றது சாதனை அம்சம் கிடையாது. பென் - ஹர் (1959), டைட்டானிக் (1997), தி லார்ட் ஆப் ரிங்ஸ் (2003) ஆகிய திரைப்படங்கள் 11 பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளதே இதுவரை காணாத வரலாற்றுச் சாதனையாக உள்ளது.

மற்ற பிரிவுகளில் வழங்கப்பட்ட விருதுகள் 

சிறந்த நடிகர் : பிரெண்டன் பிரசர் “தி வால்” (அமெரிக்கா)
சிறந்த தழுவிய திரைக்கதை : சாரா பொலி - “விமன்ஸ் டாக்கிங்” (பொலிவியா)
சிறந்த ஒலிப்பதிவு : அல் நெல்சன் “டாப் கன்: மேவ்ரிக்” (அமெரிக்கா)
சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரம் : அட்ரின் மொரொட், ஜூடி சின், அனிமேரி பிராட்லி - தி வால் (அமெரிக்கா)
சிறந்த காட்சி அமைப்பு : ஜோ லெட்டரி, ரிச்சட் பனிஹம், எரிக் சைண்டான், டேனியல் பெரிட் - “அவதார் - 2” (கனடா)
சிறந்த ஆடை வடிவமைப்பு : ரூத் கார்டர் - “பிளாக் பேந்தர்ஸ்: விஹண்டா பார்எவர்” (அமெரிக்கா)
சிறந்த ஆவணப்படம் : “நவல்னி” (ரஷ்யா)
சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் : “அன் ஐரிஷ் குட்பாய்” (அயர்லாந்து)
சிறந்த அனிமேஷன் படம் : “குஹ்லிர்மொ டில் டோரோஸ் பினோஷியோ” (அமெரிக்கா)
சிறந்த அனிமேஷன் குறும்படம் : சார்லி மெகிசி. மேதிவ் பிரிடு “தி பாய், தி மொலி, தி பாக்ஸ் அண்ட் தி ஹார்ஸ்” (பிரிட்டன்)

ஜெர்மனி திரைப்படத்திற்கு 3 விருதுகள்

முதல் உலகப் போர் தொடர்பாக எரிச் ரீமார்க்கின் நாவலின் தழுவலை கொண்டு இயற்றப்பட்ட “ஆல் க்வைட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்” சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த வெளிநாட்டு திரைப்பட பின்னணி இசை ஆகிய 3 பிரிவுகளில் ஆஸ்கர் விருதினை வென்றுள்ளது.

1.    சிறந்த சர்வதேச திரைப்படம் : “ஆல் க்வைட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்” (ஜெர்மனி)
2. சிறந்த வெளிநாட்டு திரைப்பட பின்னணி இசை: வால்கர் பிர்டெல்மென் “ஆல் க்வைட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்” (ஜெர்மனி)
3. சிறந்த ஒளிப்பதிவு : ஜேம்ஸ் பிரண்ட் “ஆல் க்வைட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்” (ஜெர்மனி)