world

img

குரோவர் கம்பெனி தொழிலாளர் வேலைநிறுத்தம்

அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உள்ள கிங் சூப்பர் மற்றும் மாநகர மளிகை கடைகளில் பணிபுரியும் 8000 -க்கும் மேற்பட்ட தொழிலாளர், நிர்வா கத்தின் நியாயமற்ற தொழிலாளர் விரோத அணுகுமுறைக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் இறங்க ஜனவரி 3ல் வாக்கெ டுப்பு நடத்தினர். ஏகமனதாக வேலை நிறுத்தம் செய்ய முடி வானது. ஒரு மணி நேர வேலைக்கு ஆறு டாலர் உயர்வு, சுகாதார ஓய்வுகால பலன்கள் மேம்பாடு கோரி கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்கினர். அமெரிக்கா வின் மிகப்பெரும் சூப்பர் மார்க்கெட் தொடர் குரோவர். இக்கம்பெனியின் முதன்மை தலைமை அதிகாரியின் ஊதி யம், தொழிலாளியின் ஊதியத்தை விட 909 மடங்கு கூடுத லாகும். யுனைடெட் புட் அண்ட் கமர்சியல் ஒர்க்கர்ஸ் யூனிய னில் பெரும்பாலான தொழிலாளர்கள் உறுப்பினராக உள்ள னர். சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்களிடம் நேரடி யாக நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

சங்க நட வடிக்கைகளை தடை செய்கிறது. அமெரிக்க தொழிலாளர் சட்டப்படி நிர்வாகத்தின் அநியாய தொழிலாளர் விரோத அணுகு முறையை கண்டித்து தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்தால் அவர்களுக்கு பதிலாக வேறு யாரையும் பணி யில் அமர்த்தக் கூடாது .ஆனால் நிர்வாகம் வெளி ஆட்களை பணியில் அமர்த்துகிறது. தொழிலாளர் பெறும் ஊதியத்தில் போஷாக்கான உணவு கிடைப்பதில்லை. அண்டை வீட்டுக்காரர்கள் முட்டை ரொட்டி தருவார்கள் என குடும்பங்கள் எதிர்பார்க்கும் நிலை. வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் காரிலேயே வாழ்கின்றனர் .கொரோனா பெரும் தொற்றுக் காலத்திலும் கொரோனா பாதித்தாலும் தொழிலாளர் பணி புரிகின்றனர். கம்பெனி கொரோனா காலத்திலும் அபரிமித லாபம் ஈட்டுகிறது. அமெரிக்க இடதுசாரி செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை ஆத ரித்து அறிக்கை விட்டுள்ளார். கம்பெனி முதன்மை தலைமை அதிகாரிக்கு 2 கோடி டாலர் ஊதியம் வழங்கும் போது ஏன் தொழிலாளர்களின் ஊதியத்தை மேம்படுத்தக்கூடாது என கேள்வி எழுப்பி உள்ளார்.