அமெரிக்க காவல்துறையைச் சேர்ந்த டெரெக் சாவின் என்ற இனவெறி பிடித்த அதிகாரி 2020-ஆம் ஆண்டு ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கருப்பினத்தவரை கொலை செய்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். டூசான் நகர சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருந்த இவர், சக கைதி ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். சிறையில் பாது காவலா்கள் பற்றாக்குறையாக இருப்பதால் கைதிகளுக்கு இடையே சண்டை உருவான போது தடுக்க இயலவில்லை என கூறப்பட்டுள்ளது.