world

img

டிவிட்டர் ப்ளூடிக் கட்டண திட்டத்தால் வந்த வினை... தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக எலான்மஸ்க் அறிவிப்பு

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் ஆட்குறைப்பு உள்ளிட்ட பல கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. டிவிட்டர் ஊழியர்களுடனான முதல் சந்திப்பில் புதிய மற்றும் அதிகப்படியாக வருவாய் ஈட்ட துவங்க வில்லை எனில் டிவிட்டர் திவாலாகும் நிலையில் உள்ளது என்றார். இந்த நிலையில் கடந்த காலங்களில்  பிரபலம் மற்றும் பாலோயர்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட ப்ளூ டிக் வசதி தற்போது மாதம் 8 டாலர் கட்டணம் செலுத்துபவர்களுக்கு வழங்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்தார். இதைத்தொடர்ந்து இயேசுகிறிஸ்சு பெயரில் தொடங்கப்பட்ட டிவிட்டர் கணக்கிற்கு 8 டாலர் செலுத்தப்பட்டதால் ப்ளூ டிக் வழங்கப்பட்டுள்ளது. அதில் கார்பெண்டர் ஹீலர், கடவுள் இஸ்ரேல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் Nintendo Inc நிறுவனத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட ஒரு டிவிட்டர் கணக்கில் நடுவிரல் காட்டும் புகைப்படம் பதிவிடப்பட்டு உள்ளது. இதேபோல் பார்மா நிறுவனமான Eli Lilly & Co பெயரில் திறக்கப்பட்ட கணக்கில் இன்சுலின் இலவசம் என அறிவிக்கப்பட்டது, இதனால் Eli Lilly & Co. தனது அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து மன்னிப்பு கேட்டது. 

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார் போல் எலான் மஸ்க்கின் சொந்த நிறுவனமான டெஸ்லா பெயரிலும் போலி  டிவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டு அதில் கார் பாதுகாப்பு குறித்துக் கிண்டல் செய்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் டிவிட்டர் போலி கணக்குகளைச் சமாளிக்கச் சில முக்கியக் கணக்குகளுக்கு official என்ற லேபிள் சேர்க்கப்பட்டு உள்ளது என டிவிட்டர் வெள்ளிக்கிழமை அறிவித்தது, இதைத் தொடர்ந்து எலான் மஸ்க், மற்றவர்களைப் போல் போலி கணக்குகள் உருவாக்கியவர்கள் பெயருக்குப் பக்கத்தில் parody என்ற வார்த்தையைச் சேர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ப்ளூ டிக் வழங்க புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 8 டாலர் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது