world

img

காலத்தை வென்றவர்கள் : விஞ்ஞானி அலெக்சாண்டர் பிளெமிங் பிறந்த நாள்....

விஞ்ஞானி அலெக்சாண்டர் பிளெமிங் 1881ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6ஆம் நாள் பிறந்தார்.  தொழில் நுட்பக் கல்லூரிப் படிப்பை முடித்தபிறகு 16 வயதிலேயே கப்பல் நிறுவனம் ஒன்றில்அவர் அலுவலராகச் சேர்ந்தார். எழுத்தர்பணி அவருக்கு மனநிறைவை அளிக்கவில்லை. தூரத்து உறவினர் ஒருவரிடமிருந்து கிடைத்த சொத்து, அவர் மிகத் தாமதமாக தனது 20 வயதில் மருத்துவக் கல்லூரியில் சேர வழி செய்தது.

அலெக்சாண்டர் பிளெமிங் நுண்ணுயிர்க் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர்க் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார். உலகம்அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும்சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிசிலின் போன்ற நச்சுமுறிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டுபிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக்ஸாண்டர் பிபௌமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு. இவர் 1955ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள் மறைந்தார்.

பெரணமல்லூர் சேகரன்

;