world

img

டெஸ்லா,பிஎம்டபிள்யு உள்ளிட்ட 13 நிறுவனங்களில் சங்கத்தை விரிவுபடுத்த திட்டம்

நியூயார்க்,டிச.1- அமெரிக்காவில் ஃபோர்டு,ஜெனரல் மோட்டார்ஸ், ஸ்டெல்லாண்டிஸ் ஆகிய தொழிற்சாலைகளில் ஒருங்கிணைந்த வாகன தொழிலாளர்கள் சங்கத்தின் போ ராட்டம் வெற்றிபெற்றது.இந்த  போராட்ட வெற்றிக்கு பிறகு தொழிற்சங்கம் இல்லாத 13 முன்னணி வாகன உற்பத்தி தொழிற் சாலைகளில் உள்ள 1 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்களை  சங்கத்தில் இணைக்கும் பணியை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளது. டெஸ்லா,பிஎம்டபிள்யு, வால்க்ஸ்வோ கன், மெர்சிடிஸ்,வோல்வோ, டொயோட் டா, ஹோண்டா, நிசான், ஹுண்டாய் , சுபாரு, ரிவியன், லூசிட் ஆகிய தொழிற்சங்கம் இல்லாத 13 வாகன உற்பத்தி தொழிற் சாலைகளில் உள்ள  தொழிலாளர்களை ஒன்றிணைக்க இந்த தொழிற்சங்கம் தற்போது முயற்சித்து வருகிறது. தொழிலாளர்களை அவர்களின் ஒரு மித்த உணர்வில் இருந்து  பிரிக்கவும், அவர்களின் ஊதியத்தை குறைக்கவும் இந்த வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் முழுநேர, தற்காலிக மற்றும் ஒப்பந்த முறையில்  ஊழியர்களை பணியமர்த்தி வருகின்றன எனவும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. ஹூண்டாய் வாகன  பாகங்கள்  ஒருங் கிணைப்பு ஆலை ஒப்பந்த ஊழியர் ஒரு வர், முழுநேர நிரந்தர ஊழியராக மாறுவ தற்கு முன்பு வரை துணை ஒப்பந்தக்கார ரிடம் ஒரு மணி நேரத்திற்கு 770 ரூபாய் மட்டுமே ஊதியமாக பெறுவதாகக்  கூறு கிறது.

தொழிற்சங்கம் இல்லாத சில உற்பத்தி நிறுவனங்களிடம்  குறிப்பாக பிக் த்ரீ எனப்படும் சர்வதேச நிறுவனங்களில் ஒருங்கிணைந்த  வாகன தொழிலாளர்கள் சங்கம்  பேச்சுவார்த்தை மூலம் ஊதியத்தை ஒரு மணிநேரத்திற்கு 1,950.29 ரூபாயாக உயர்த்தியது.அதிகபட்சமாக 2,700.33 ஆக உள்ளது. இருப்பினும், ஊதியம், சலு கைகள் மற்றும் வேலை உரிமைகளில் சங்கம் அமைத்துள்ள  தொழிலாளர்க ளை விட தொழிற்சங்கம் இல்லாத தொழிலாளர்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர்  என்று தொழிற்சங்கம் தெரி வித்துள்ளது. மேலும் பணிபுரியும் இடத்தில் எல்லா விதமான பாதுகாப்புச் சிக்கல்களும் உள்ள  நிலையில்  நிறுவனங்களின் வரு மானம் மட்டும்  பல கோடிகளாக உள்ளது. தொழிற்சங்கம் இல்லாத ஒவ்வொரு  நிறு வனத்திலும் பாதிக்கப்பட்டுக் கொண்டுள்ள  தொழிலாளி  பற்றிய  பல  கதை உள்ளது. பாதுகாப்பின்மை, குறைந்த ஊதியம், கட்டாயமான முறையில் அதிகப்படியான வேலைநேரம்  என பல காரணங்கள் எதிர் கொள்ள, நாம் தொழிற்சங்கமாக இருக்க வேண்டும்.எனவே இந்த  13 தொழிற் சாலைகளிலும் உள்ள தொழிலாளர்க ளை தொழிற்சங்கத்தின் கீழ் அணி திரட்ட திட்டமிட்டு வருவதாகவும் ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், ஸ்டெல்லாண்டிஸ் ஆகிய பெரு நிறுவனங்களோடு நடத்திய பேச்சுவார்த்தையின் வெற்றி எங்களுக்கு அனுபவமாகவும் பலமாகவும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.