சிரியாவிற்கு வெனிசுலா ஆதரவு
சிரியா நாட்டின் அலெப்போ நகரத்தில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து வெனிசுலா அரசு, சிரிய அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி அல்-அசாத்துக்கு ஆதரவை தெரிவித் துள்ளது. வெனிசுலா ஜனாதிபதி மதுரோ தொலைபேசி வாயி லாக அசாத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை, சிரிய அரசு மற்றும் மக்களுக்கு எதிராக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான பயங்கரவாதிகளால் நடத்தப்படும் அனைத்து தாக்குதல்களையும் கண்டித்துள்ளது.
மேற்குக் கரையில் 1,500 பாலஸ்தீனர்களின் கட்டடங்கள் இடிப்பு
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையில் 2024 துவக்கத்தில் இருந்து சுமார் 1,500 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களின் வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களை இஸ்ரேல் ராணுவம் இடித்துள்ளது. பாலஸ்தீனர்கள் வசித்து வந்த 700 வீடு கள், மக்கள் வசிக்காத 118 வீடுகள், 398 விவ சாயம் தொடர்பான கட்டுமானங்கள் உட்பட 1,528 கட்ட மைப்புகளை இஸ் ரேல் படைகள் அழித்து விட்டதாக மனிதாபிமான விவகா ரங்களின் ஒருங்கிணைப்பிற்கான ஐ.நா. அலுவல கத்தின் (OCHA) தரவுகள் தெரிவித்துள்ளன.