தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிகாகோவில் நடைபெற்ற கலைவிழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் எப்படி இருக்குமோ அதைப் போல அல்ல, அதை விட மிக சிறப்பாக இந்த நிகழ்ச்சி உள்ளது. அமெரிக்க வாழ் தமிழர்களுடன் இருப்பது தமிழ் மண்ணில் இருக்கக்கூடிய உணர்வை தருகிறது” என்று கூறினார்.