தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் தெற்கு தலைநகரான கராகஸ் நோக்கி சென்று கொண்டிருந்தபோது,வாலெஸ் டெல் டை பள்ளத்தாக்கு அருகே லியர்ஜெட் 55சி என்ற தனியார் விமானம் விபத்துக்குள்ளானதாக உள்ளுர் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். தரவுகளின்படி, 4 பயணிகள் உள்பட 6 பேர் விமானத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது.
சிக்னல் துண்டிப்பதற்கு 29 நிமிடங்கள் முன் வரை விமானம் வானில் பறந்ததாகவும், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.