கொழும்பு
இலங்கை நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த சில நாட்களாக சர்வதேச விமான போக்குவரத்திற்கு அந்நாட்டு தடை விதித்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை மூடியது.
தற்போது அங்கு கொரோனா பரவல் சற்று குறைந்து வருவதால் சர்வதேச விமான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் கொழும்பு சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்ட சில மணிநேரங்களில் 53 பயணிகள் கத்தார் நாட்டிலிருந்து வந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த பின்பு நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டனர். இலங்கையில் சர்வதேச விமான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டாலும், இந்திய, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.