world

img

இலங்கை ஜனாதிபதி தேர்தல்- வாக்குப்பதிவு விறுவிறுப்பு

இலங்கையின் 9-ஆவது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இலங்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார சரிவுக்கு பின் இத்தேர்தல் நடைபெறுவதால் மிகுந்த கவனம் பெற்றுள்ளது.

தேர்தலில் வாக்களிக்க 1 கோடியே 71 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். 38 பேர் போட்டியாளர்களாக களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமை செப்.22 பிற்பகலுக்குள் புதிய ஜனாதிபதி யார் என தெரியவரும் என கூறப்படுகிறது.

இலங்கையில் தற்போது நடக்கும் ஜனாதிபதி தேர்தல் முற்றிலும் வேறுபட்ட ஒரு இயல்பைக் கொண்ட தேர்தலாக பார்க்கப்படுகிறது. 20 ஆண்டுகால வரலாற்றில் வெளிப்படையாக இனவாதம் பேசப்படாமல் நடத்தப்படும் தேர்தல் என்று இதனைக் கூறலாம். தமிழ் பிரிவினை வாதம், தமிழர் இனவாதம், இஸ்லாமிய தீவிரவாதம் என வெளிப்படையாக பேசாமல் நடத்தப்படும் முதல் தேர்தல் இதுவென்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தென் கிழக்கு ஆசியாவில் முக்கிய கேந்திர நிலையமாக இலங்கை இருப்பதால், பாதுகாப்பு என்ற போர்வையில் இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை கூர்ந்து கவனித்து வருகின்றன.