world

img

சோமாலியா: தற்கொலை படை தாக்குதலில் 7 பேர் பலி  

சோமாலியாவில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 7 பேர் பலியாகியுள்ளனர்.    

மத்திய சோமாலிய நகரமான பெலட்வெயினில் சனிக்கிழமையன்று உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் நிரம்பிய உணவகத்தில் தற்கொலை குண்டுதாரி ஒருவர் தங்களைத் தாங்களே வெடிக்கச் செய்ததில் ஏழு பேர் கொல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.  

இதை பார்த்த உள்ளூர் பெரியவரான ஒருவர் கூறுகையில், நள்ளிரவில் தாக்குதலில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டதாக கூறினார். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவர்களில் நானும் ஒருவன் என்று கூறினார்.  

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் சமீப காலங்களில் அதிக அளவிலான தாக்குதல் நடைபெற்று வருகின்றன. கடந்த 2 வாரங்களில் மட்டும் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.