ரஷ்யாவுடன் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் ரஷ்யாவின் போர் 4ஆவது நாளாக நடந்து வருகிறது. மேலும் உக்ரைனில் உள்ள முக்கியமான நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இதனால் இந்தியர்கள் உள்பட உக்ரைனில் உள்ள மக்கள் அனைவரும் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் சுரங்க பாதைகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அதனை தொடர்ந்து தங்கள் மக்களை மீட்க அந்தந்த நாடுகள் முயற்சி செய்தும் வருகின்றது.
இந்நிலையில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த நிபந்தனை விதித்துள்ளதாகவும் ரஷ்ய பத்திரிகைகள் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா அழைப்பு விடுத்திருந்தபோது உக்ரைன் மறுப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.