மாஸ்கோ, நவ.24- அமெரிக்கா போர் பதற்றத்தை அதிகரிப்பதாகவும், ரஷ்யாவின் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு ஏற்ப தமது நாட்டின் எதிர்வினை அமையும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்ச ரித்துள்ளார். அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதல் நடத்திய பின்னர், ரஷ்யா வும் உக்ரைன் மீது நவீன ஏவுகணைகளைப் பயன்படுத்தியது. இதனால் போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில் புடின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். உக்ரைனை நோக்கி ரஷ்ய ராணுவம் புதிய ஹைப்பர்சோ னிக் ஏவுகணை அமைப்பை நிறுவியுள்ளதாக புடின் தெரிவித் தார். அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் வழங்கிய நவீன ஏவுகணைகளையே உக்ரைன் பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷ்யா பயன்படுத்தியது ‘ஓரேஷ்னிக்’ (‘ஹேசல்’) என்ற அதிநவீன இடைநிலை ஏவு கணையை மட்டுமே என புடின் விளக்கினார். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இதுவரை பயன் படுத்தப்படவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார். ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் வினாடிக்கு 2.5 முதல் 3 கிலோமீட்டர் வேகத்தில் பாயக்கூடியவை - இது ஒலியின் வேகத்தை விட 10 மடங்கு அதிகம். இவற்றை ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க-நேட்டோ வான் பாதுகாப்பு அமைப்புகளால் தடுக்க முடியாது என புடின் எச்சரித்தார். குரூக்ஸ் பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் இங்கிலாந்தின் ஸ்ட்ராம் ஷேடோ ஏவுகணைகள் பயன் படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இத்தகைய அதிநவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதன் மூலம் அமெரிக்காவும் நேட்டோவும் வேண்டுமென்றே போர் நெருக்க டியை தீவிரப்படுத்துவதாக புடின் குற்றம்சாட்டினார். வரும் நாட்களில் உக்ரைனில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தும் முன், அப்பகுதி மக்களுக்கு முன்கூட்டியே எச்ச ரிக்கை விடுக்கப்படும் என புடின் தெரிவித்தார். எனினும் இந்த எச்சரிக்கைகள் ரஷ்ய ராணுவத்தின் தாக்கும் திறனைக் குறைக்காது என்றும் அவர் உறுதிபட கூறினார்.