world

பாகிஸ்தான் கடல் பகுதியில் பெரிய அளவில் எண்ணெய், எரிவாயு இருப்புகள் கண்டுபிடிப்பு டான் நியூஸ் செய்தி அறிக்கை

இஸ்லாமாபாத், செப்.9- பாகிஸ்தானின் கடல் எல்லைக்குள் கணிசமான பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த இருப்புகள் மிகப் பெரிய அளவு இருப்பதால், அந்த வளங்களை பயன்படுத்துவது நாட்டின் விதியை மாற்றக்கூடும் என்று ஊடக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது

ஒரு நட்பு நாட்டுடன் இணைந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகளின் இருப்பை உறு திப்படுத்த மூன்று ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது என்று டான் நியூஸ் டிவி ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரியை மேற்கோள் காட்டி தெரிவித்தது.

புவியியல் ஆய்வு பாகிஸ்தானுக்கு இந்த படிவு களின் இருப்பிடத்தை அடையாளம் காண உதவி யது; மேலும் தொடர்புடைய துறைகள் பாகிஸ்தான் கடல் பகுதியில் கண்டறியப்பட்ட வளங்கள் குறித்து அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளன.

‘நீல நீர் பொருளாதாரம்’ என்று குறிப்பிட்டு, இதன் பலன்களைப் பெறும் முயற்சியாக, ஏலம் மற்றும் ஆராய்ச்சிக்கான முன்மொழிவுகள் ஆய்வு செய்யப்படுவதாகவும் அந்த  அதிகாரி கூறினார். இதன் பொருள் அண்மை எதிர்காலத்தில் ஆய்வுப்  பணிகளைத் தொடங்க முடியும் என்பதாகும்.

எனினும், கிணறுகளை தோண்டுதல் மற்றும் உண்மையில் எண்ணெய் எடுக்கும் பணி பல ஆண்டுகள் எடுக்கலாம் என்று அவர் கூறினார்.

ஆனால் ‘நீல நீர் பொருளாதாரம்’ எண்ணெய் மற்றும் எரிவாயு மட்டுமல்லாமல் அதிகமான வளங்களைத் தர முடியும்; கடலில் இருந்து சுரங்கம் தோண்டக்கூடிய பல மதிப்புமிக்க கனிமங்களும் உள்பொருட்களும் உள்ளன.  முன்முயற்சி எடுத்து விரைவாகச் செயல்படுவது நாட்டின் பொருளாதார விதியை மாற்ற உதவக்கூடும் என்றும் அவர் கூறினார்.

இந்த கண்டுபிடிப்பு உலகின் நான்காவது மிகப் பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பாக இருக்கலாம் என சில மதிப்பீடுகள் கூறுகின்றன.

தற்போது, வெனிசுலா சுமார் 303 பில்லியன் பேரல் அளவிற்கு எண்ணெய் இருப்புகளில் முன்ன ணியில் இருப்பதாக கருதப்படுகிறது; அதே சமயம் அமெரிக்கா அதிக அளவில் பயன்படுத்தப்படாத ஷெல் எண்ணெய் (பாறையிடுக்கு எண்ணெய்) இருப்புகளைக் கொண்டுள்ளது. சவூதி அரேபியா, ஈரான், கனடா, இராக் ஆகியவை மீதமுள்ள முதல் ஐந்து இடங்களைப் பெற்றுள்ளன.

டான் நியூஸ் டிவியிடம் பேசிய முன்னாள் ஓகிரா  (எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம்) உறுப்பினர் முகமது ஆரிஃப், நாடு நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றாலும், எதிர்பார்த்தபடி இருப்புகள் கண்டுபிடிக்கப்படும் என்பதற்கு 100 சதவீத உறுதி இல்லை என்றார்.

இந்த இருப்புகள் நாட்டின் ஆற்றல் தேவை களை பூர்த்தி செய்ய போதுமானதா என்று கேட்ட போது, அது உற்பத்தியின் அளவு மற்றும் சுத்தி கரிப்பு விகிதத்தைப் பொறுத்தது என்றார்.

ஆய்வுக்கு மட்டுமே சுமார் 5 பில்லியன் டாலர் அளவிற்கு பெரும் முதலீடு தேவைப்படும் என்றும், கடலுக்கு அடியில் உள்ள இருப்புகளை பிரித்தெடுக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆக லாம் என்றும் கிணறுகள் மற்றும் இருப்புகளை பிரித்தெடுத்து எரிபொருள் உற்பத்தி செய்வதற் கான உள்கட்டமைப்பை அமைப்பதற்கு மேலும் முத லீடு தேவைப்படும் என்றும் டான் செய்தி விவரிக்கிறது.