world

img

ஒரு வருடத்தில் பாலஸ்தீன ஆக்கிரமிப்பில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் : ஐ.நா. தீர்மானம் இந்தியா ஆதரிக்க மறுப்பு

நியூயார்க்,செப்.18- பாலஸ்தீனத்தின் பகுதிகளை ஆக்கிர மித்துள்ள இஸ்ரேல் ஒரு வருடத்தில் வெளியேற வேண்டும் என ஐ.நா. பொது அவையில்  கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காமல் புறக்கணித்துள்ளது.

இது இந்திய வெளியுறவுக்கொள்கைக்கு எதிரான நடவடிக்கையாகும்.  புதன் கிழமையன்று ஐ.நா. பொது அவை யில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளை முடி வுக்கு கொண்டு வரும் பொருட்டு கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் அமெரிக்காவின் கூட்டாளிகளான பிரான்ஸ், பின்லாந்து உள்ளிட்ட 124 நாடுகளின் ஆதரவோடு நிறை வேற்றப்பட்டுள்ளது.  அமெரிக்கா, அமெரிக்காவின் தீவிர அடி வருடியான ஜேவியர் மிலேய் தலைமையிலான அர்ஜெண்டினா அரசு, இஸ்ரேல் உள்ளிட்ட 14 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்க ளித்துள்ளன.

 இந்தியா உட்பட  43 நாடுகள் தீர்மானத்தி ற்கு ஆதரவாக  வாக்களிக்காமல் நடுநிலை என்ற பெயரில் பாலஸ்தீன மக்களுக்கு துரோ கம் செய்துள்ளன. வாக்கெடுப்புக்குப் பிறகு பாலஸ்தீனப் பகுதி களில் இஸ்ரேல் தனது சட்டவிரோத   ஆக்கிர மிப்புகளை தாமதமின்றி  அடுத்த 12 மாதங்க ளுக்குள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானத்தை பொது அவை ஏற்றுக் கொள்வதாக ஐ.நா. அறிவித்துள்ளது.

2022 டிசம்பர் 31 அன்று நடைபெற்ற ஐ.நா. பொது மன்றத்தில், பாலஸ்தீனப் பகுதி களை நீண்ட காலமாக இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்திருப்பதால் ஏற்பட்டுள்ள சட்டரீதியான விளைவுகள் குறித்து, சர்வதேச நீதிமன்றம் தன் கருத்தைக் கூற வேண்டும் என்று, கொண்டு வந்த தீர்மானத்தின் மீதும்  இந்தியா வாக்க ளிக்காமல் ஒதுங்கிக் கொண்டது குறிப்பித்தக்கது. மோடி அரசாங்கம், இஸ்ரேலுடனான நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டி ருப்பது அறிந்த ஒன்றேயாகும். தற்போதும் பாலஸ்தீன அரசுடன் கொண்டுள்ள உறவை விட இஸ்ரேலுடனான உறவையே  இந்தியா அதிகமாக வலுப்படுத்தி வருகிறது.  

இந்தியாவில் இருந்து 10,000 க்கும் அதிக மான இளைஞர்களை கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் வேலை செய்வதற்காக இஸ்ரே லுக்கு அவர்களின் உயிரையும் பொருட் படுத்தாமல் அனுப்ப துணிந்து உள்ளது இந்திய அரசு. மேலும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு தேவையான வெடிமருந்துகள், ஆயுதம் மற்றும் வாகனங்களுக்கான உபகரணங்களையும் மோடி அரசு தங்கு தடையின்றி  அனுப்பி வைத்து இஸ்ரேலுக்கான தனது விசுவாசத்தைக் காட்டி வருகிறது.