world

img

இஸ்ரேலைக் கண்டித்து 6 லட்சம் பேர் பேரணி

இஸ்ரேலைக் கண்டித்து 6 லட்சம் பேர் பேரணி

இங்கிலாந்தை உலுக்கிய காசா ஆதரவு முழக்கம்

லண்டன், மே 19 - இஸ்ரேலின் இனப்படுகொலை யைக் கண்டித்து, சுமார் 6 லட்சம் மக்கள் இங்கிலாந்தில் பேரணி மற்றும் போராட்டம் நடத்தியுள்ளனர். 1948ஆம் ஆண்டு 7.5 லட்சம் பாலஸ்தீனர்கள் அவர்களது சொந்த நிலத்தில் இருந்து வெளியேற்றிய நக்பா நினைவு தினத்தின் 77-ஆம்  ஆண்டு நினைவு தினம் மே 18 அன்று  உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப் பட்டது. அன்றைய தினம் இங்கிலாந்தில் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மாபெரும் பேரணியை நடத்தினர். இங்கிலாந்து அரசு, இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆதரவாக இருக்கக்கூடாது; இஸ்ரேலுக்கு ஆயுத  உதவி செய்யக்கூடாது என முழக்கங் களை எழுப்பினர். மேலும், இங்கிலாந்தில் இஸ்ரே லைப் புறக்கணிக்க வேண்டும் என பல மாதங்களாக பிரச்சாரம் நடை பெற்று வருகிறது. இதன்படி கோ-ஆப் சூப்பர் மார்க்கெட் என்ற வணிக நிறுவனம் தனது ஊழியர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது. அதன் அடிப்படையில்  இஸ்ரேலுடனான வணிகத்தை வரும் மாதத்தில் நிறுத்த உள்ளதாகவும் அதற்கான பரிசீலனையில் உள்ளதாக வும் அறிவித்துள்ளது.