தெற்கு லெபனான் மீதான தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன நாட்டை இஸ்ரேல் ஆக்கிரமித்ததை தொடர்ந்து இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது.
பாலஸ்தீனத்தின், காசா பகுதி மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், ஹமாஸுக்கு ஆதரவாக லெபானிலிருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தினர். இதையடுத்து, ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் கொடூரத் தாக்குதலை நடத்தி வருகிறது.
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உள்ளிட்ட அந்த அமைப்பின் முக்கிய தளபதிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் தெற்கு லெபனானின் பராச்சிட் பகுதிக்கான ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி அபு அலி ரிடா உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அவர் எப்போது கொல்லப்பட்டார் என தெரிவிக்கப்படவில்லை.