world

img

காசாவில் இஸ்ரேல் போரின் ஓராண்டு உலகெங்கும் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள்

பெய்ரூட், அக். 6- காசாவில் இஸ்ரேலின் அழிவுகரமான போர் இன்று (அக்.7) ஓராண்டை எட்டும் நிலையில், உலகின் முக்கிய நகரங்களில் பல பத்தா யிரக்கணக்கானோர் தெருக் களில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில், 1,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீன ஆதரவாளர்கள் அமெரிக்க தூதரகம் முன்பு கூடி, இஸ்ரேலுக்கு  ஆயுதங்கள் அனுப்புவதை நிறுத்துமாறு அமெரிக்கா வை வலியுறுத்தினர்.

பிலிப்பைன்ஸ் தலை நகர் மணிலாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே இடதுசாரி ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நூற்றுக்கணக் கானோர் நாடாளு மன்றத்தை நோக்கி ஊர்வல மாக சென்றனர். “இஸ்ரேல் ஒரு இனவெறி அரசு!” “நாம் அனைவரும் பாலஸ்தீனி யர்கள்!” என கோஷமிட்ட னர். ஜோகன்னஸ்பர்க் மற்றும் டர்பனிலும் காசா ஆதரவு பேரணிகள் திட்ட மிடப்பட்டிருந்தன.

வெனிசுலாவின் தலை நகர் கராகஸில், நூற்றுக் கணக்கான பாலஸ்தீன ஆத ரவாளர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். பாலஸ்தீன “இனப்படுகொலையை” நிறுத்துமாறு கோரி ஐ.நா.வுக்கு மனு அளித்தனர்.

இத்தாலியின் தலைநகர் ரோமில் ஆர்ப்பாட்டம் வன் முறையாக மாறியதால், காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த் தாரைகளைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர்.

லண்டனில் சுமார் 40,000 பாலஸ்தீன ஆதரவாளர்கள் ஊர்வலம் சென்றனர். இது கடந்த ஒரு ஆண்டில் நடந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டங் களில் ஒன்றாகும்.

டப்ளினில் நூற்றுக் கணக்கானோர் தெருக் களில் இறங்கி, பாலஸ்தீன கொடிகளை அசைத்து “இப் போதே போர் நிறுத்தம்!” என கோஷமிட்டனர்.

பாரீஸில் நடந்த ஆர்ப்பாட் டத்தில் கலந்து கொண்ட வர்கள், “பிரான்ஸ் போது மான  நடவடிக்கை எடுக்க வில்லை” என்றும், “சர்வ தேச சமூகம் எதுவும் செய்ய வில்லை” என்றும் ஏமாற்றம் தெரிவித்தனர்.

வாஷிங்டனில் 1,000க்கும் மேற்பட்டோர் வெள்ளை மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் செய்து, இஸ் ரேலுக்கு ஆயுதங்கள் மற் றும் உதவிகளை அனுப்பு வதை நிறுத்துமாறு அமெ ரிக்காவை வலியுறுத்தினர்.

ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் பல நகரங்களில் மேலும் பல ஆர்ப்பாட்டங்கள் மற் றும் மெழுகுவர்த்தி ஊர் வலங்கள் ஞாயிறன்று நடை பெற்றன. திங்களன்றும் நடைபெறுகின்றன.