பாக்தாத்
மேற்காசிய நாடான ஈராக்கில் கடந்த 3 மாத காலமாக கொரோனா பரவல் மந்த நிலையில் பரவியது. இதனால் மக்கள் அங்கு இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையி, பிப்ரவரி மாத இறுதியில் இருந்து கொரோன வைரஸ் அடுத்த கட்ட ஆட்டத்தை தொடங்கியுள்ளது.
குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக அங்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 4 ஆயிரத்துக்கு மேல் உள்ளது. இதனால் ஈராக் நாட்டில் அடுத்த இரண்டு வார காலத்துக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில்,"மார்ச் 9-ஆம் தேதி முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை அடுத்த 2 வாரங்களுக்கு பொதுமுடக்கம் (முழு ஊரடங்கு) நடைமுறையில் இருக்கும்.வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடும் கட்டுப்பாடுடன் முழு ஊரடங்கு கடைபிடிக்கபடும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஈராக் நாட்டில் 7.31 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,596 பேர் பலியாகியுள்ள நிலையில், 6.64 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.